அது என்ன எக்ஸ்ஏடி தேர்வு?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்

Posted By:

சென்னை : எக்ஸ்ஏடி மதிப்பெண் அடிப்படையில் ஜாம்செஷட்பூர் எக்ஸ்எல்ஆர்ஐ நிறுவனம் மற்றும் பிற சேவியர் இணை மேலாண்மைக் கழகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

ஜாம்ஷெட்பூரில் உள்ள பிரபல மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனமான எக்ஸ்எல்ஆர்ஐ என்று அழைக்கப்படும் சேவியர் லேபர் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் சேர விரும்பும் மாணவர்கள் அந்த நிறுவனம் நடத்தும் சேவியர் திறனறி தேர்வு - எக்ஸ்ஏடி என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

அது என்ன எக்ஸ்ஏடி தேர்வு?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்

எக்ஸ்ஏடி எனப்படும் சேவியர் திறனறி தேர்வினை எழுத விரும்பும் மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இறுதி ஆண்டு பட்டப் படிப்பினை எதிர்கொள்ளும் மாணவர்களும் இந்த எக்ஸ்ஏடி தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

எக்ஸ்ஏடிநுழைவுத் தேர்வு லிபா என்று அழைக்கப்படும் லயோலா இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (சென்னை), எக்ஸ்ஐஎம்இ (பெங்களூரு), செயின்ட் ஜோசப்ஸ் காலேஜ் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (பெங்களூரு), சேவியர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (ஜபல்பூர்), செயின்ட் பிரான்சிஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் அண்ட் ரிசர்ச் (மும்பை) உள்பட நூற்றுக்கு மேற்பட்ட மேனேஜ்மெண்ட் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வாகும்.

கடந்த சில ஆண்டுகளாக இருந்த தேர்வு முறையே வரும் நுழைவுத் தேர்விலும் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வெர்பல் அண்ட் லாஜிக்கல் எபிலிட்டி, டெசிஷன் மேக்கிங், குவான்டிடேட்டிவ் எபிலிட்டி அண்ட் டேட்டா இன்டர்பிரட்டேஷன், பொது அறிவு ஆகிய பிரிவுகளில் கேள்விகள் இருக்கும். அத்துடன் கட்டுரையும் எழுத வேண்டியதிருக்கும். இந்த எக்ஸ்ஏடி தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும்.

அகர்தலா, போபால், கட்டாக், கவுகாத்தி, ஜாம்ஷெட்பூர், அகமதாபாத், புவனேஸ்வர், டேராடூன், ஹைதெராபாத், கான்பூர், அலகாபாத், சண்டிகர் தில்லி, இந்தூர், கொல்கத்தா, அமிர்தசரஸ், சென்னை, கோவா, ஜபல்பூர், லக்னோ, பெங்களூரு, கொச்சி, கிரேட்டர் நொய்டா, ஜெய்ப்பூர், மங்களூர், பெர்ஹாம்பூர், கோயம்புத்தூர், குர்கான், ஜம்மு, மும்பை, நாக்பூர், நாசிக், நொய்டா, பாட்னா, புனே, ராய்ப்பூர், ராஞ்சி, ரூர்கேலா, சம்பல்பூர், சூரத், திருச்சி, திருவனந்தபுரம், உதய்பூர், வதோதரா, வாரணாசி, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

English summary
XAT - The Xavier Aptitude Test is a national level aptitude test conducted by XLRI Jamshedpur. The scores of the XAT will be used for admissions by XLRI Jamshedpur and other Xavier Associate Management Institutes and over 100 B-schools across the country.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia