கூட்டு நுழைவுத் தேர்வு (ஜெஇஇ) பற்றி அறிவோமா!

Posted By:

புது டெல்லி : ஜெஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசாங்கம் மற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்டும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும்.

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (என்ஐடி), ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள எஞ்னியரிங் படிப்பில் சேருவதற்காக இந்தத ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் நடத்தப்படுகிறது. இது ஜெஇஇ மெயின் தேர்வு மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.

கூட்டு நுழைவுத் தேர்வு (ஜெஇஇ) பற்றி அறிவோமா!

கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதன் நோக்கம் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதாகும். ஜெஇஇ தேர்வில் எடுக்கும் மார்க்குகளை அடிப்படையாகக் கொண்டே சீட் அலட் செய்யப்படுகிறது.

கூட்டு நுழைவுத் தேர்வு என்றால் என்ன?

நாடு முழுவதும் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (என்ஐடி) மற்றும் ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் பி.இ மற்றும் பிடெக் படிப்புகளில் சேருவதற்காக இந்த ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் தேசிய அளவில் நடத்தப்படுகிறது. இது ஜெஇஇ மெயின் தேர்வு மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு என்று இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. மேலும் ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுத முடியும். ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வை மையமாகக் கொண்டுதான் ஐஐடியில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


ஜெஇஇ தேர்வு ஆன் லைன் மற்றும் ஆப் லைன் ஆகிய இரண்டு முறையிலும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 3 பாடங்களை உள்ளடக்கியதாகும்.

முதல் தாளில் ஆப்ஜக்ட்டிவ் (புறநிலை வகை வினாத்தாள்) முறையில் கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். மேலும் இதில் எஐஇஇஇ (சுருக்க பரஸ்பர, விரிவாக்கம் மற்றும் எக்ட்ராபோலேஷன் பொறி) சம்பந்தப் பட்ட கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாவது தாள் தேர்வு என்ஐடி, ஐஐஐடி மற்றும் மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள பி.ஆர்க் மற்றும் பி.பிளானிங் கோர்ஸ்களில் சேருவதற்காக நடத்தப்படும் தேர்வாகும். இதில் கணிதம், திறனறிதல் மற்றும் படம் வரைதல் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்படும். இது ஆப் லைன் முறையில் நடத்தப்படும் தேர்வாகும். அதாவது பேப்பர் மற்றும் பேனாவைப் பயன்படுத்தி எழுகின்ற எழுத்துத் தேர்வாக மட்டுமே இரண்டாவது தாள் தேர்வு நடத்தப்படுகிறது.

ஜெஇஇ தேர்வு மூன்று மணி நேரம் நடத்தப்படும். ஆன் லைன் மற்றும் ஆப் லைன் தேர்வு முறையில் நடத்தப்படும். இதனை மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புது டெல்லி அறிவித்துள்ளது.

ஜெஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்விற்கான தகுதிகள்

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (என்ஐடி), ஐஐஐடி மற்றும் ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள எஞ்னியரிங் படிப்பில் சேருவதற்காக இந்தத ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை புது டெல்லி மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது. இது தேசிய அளவிலான கூட்டு நுழைவுத் தேர்வாகும். இது இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. ஜெஇஇ மெயின் தேர்வு மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு ஆகும்.

ஜெஇஇ கூட்டு நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி :

12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனங்களில் பயின்றவர்களும் ஜெஇஇத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் 12ம் வகுப்பிற்கு (மேல்நிலைக் கல்விக் தகுதி) இணையான கல்வித் தகுதியைப் பெற்றவர்களாக கட்டாயம் இருக்க வேண்டும்.

ஜெஇஇ மெயின் தேர்வில் அதிகம் மதிப்பெண் பெறுபவர்கள் மட்டுமே ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வில் கலந்து கொள்ள முடியும். ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வின் மூலம் ஐஐடி நிறுவனங்களில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும்.

2017ம் வருடததிலிருந்து 12ம் வகுப்பு மார்க்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என சிபஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும் 12ம் வகுப்பில் பொதுப் பிரிவைச் சார்ந்த மாணவர்கள் 75% மார்க்கும், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சார்ந்த மாணவர்கள் 65% மார்க்கும் பெற்றிருக்க வேண்டும் அல்லது மெரிட் லிஸ்ட் அடிப்படையில் முதல் 20%க்குள் மார்க் எடுத்தவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் எனவும் அடிப்படைத் தகுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படைத் தகுதி பெற்றிருத்தல் அவசியமாகும். மற்றவர்களால் தேர்வு எழுத முடியாது.

2017ம் ஆண்டிலிருந்து ஆதார் அட்டை கட்டாயம் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையின் படி பெயர் மற்றும் பிறந்த தேதி சரிப்பார்க்கப் படும் எனத் தெரியவந்துள்ளது. எனவே ஆதார் அட்டையில்லாதவர்கள் உடனே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

English summary
The Ministry of Human Resource Development, Government of India and Central Board of Secondary education (CBSE), New Delhi introduced the national level common entrance exam called Joint Entrance Examination (JEE).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia