ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு என்றால் என்ன?

ஜெஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசாங்கம் மற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்டும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும்.

புது டெல்லி : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (என்ஐடி), ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள பிஇ, பிடெக் போன்ற படிப்பில் சேருவதற்காக இந்தத ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் நடத்தப்படுகிறது. இது ஜெஇஇ தலைமை வாரியத்தால் நடத்தப்படும் தேர்வாகும். இந்தத் தேர்வு ஜெஇஇ மெயின் தேர்வு மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.

ஜெஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசாங்கம் மற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்டும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும்.

ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு என்றால் என்ன?

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (என்ஐடி), ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள பிஇ, பிடெக் போன்ற படிப்பில் சேருவதற்காக இந்தத ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் நடத்தப்படுகிறது. இது ஜெஇஇ தலைமை வாரியத்தால் நடத்தப்படும் தேர்வாகும். இந்தத் தேர்வு ஜெஇஇ மெயின் தேர்வு மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு 2017 மே 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதன் நோக்கம் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதாகும். ஜெஇஇ தேர்வில் எடுக்கும் மார்க்குகளை அடிப்படையாகக் கொண்டே சீட் அலட் செய்யப்படுகிறது. என்ஐடி, ஐஐஐடி போன்றவற்றில் சேருவதற்கு ஜெஇஇ மெயின் தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதும் ஆனால் ஐஐடியில் சேருவதற்கு ஜெஇஇ மெயின் தேர்வு மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு இரண்டிலும் தேர்ச்சிப் பெற வேண்டும்.

ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வுப் பற்றிய தகவல்கள்

ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வாகும். ஐஐடி மும்பை, ஐஐடி டெல்லி, ஐஐடி கவுகாத்தி, ஐஐடி கான்பூர், ஐஐடி கரக்பூர், ஐஐடி சென்னை, ஐஐடி ரூர்க்கி ஆகியவை கூட்டாக சேர்ந்து ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வினை நடத்துகிறது. இந்தத் தேர்வு தேசிய அளவிலான ஏழு மண்டலங்களிலுள்ள ஐஐடிகளில் சேருவதற்காக நடத்தப்டுகிறது. ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுள் முதல் 1,50,000 இடங்களில் வரும் மாணவர்கள் மட்டுமே ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுத முடியும். இதில் அனைத்து பிரிவினைச் சார்ந்த மாணவர்களும் கலந்து கொள்ளலாம். ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் ஐஐடி, ஐஐடி பிஹெச்யூ மற்றும் ஐஎஸ்எம் தன்பாத் போன்ற உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி கற்கலாம்.

ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு இரண்டுப் பகுதியாக நடத்தப்படுகிறது. ஒவ்வொருப் பகுதித் தேர்வும் 3 மணி நேரம் நடக்கும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு கேள்வித்தாளிலும் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற தனித்தனி பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதில் ஆப்ஜக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும் மற்றும் காரணமறிதல், திறனறிதல், புரிதல், பகுப்பாய்வு போன்ற தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்படும்.

ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வில் நெகட்டிவ் மார்க் உண்டு. எனவே ஒவ்வொரு கேள்விகளுக்கும் யோசித்து சரியான பதிலை எழுதுங்கள்.

ஜெஇஇ அட்வான்ஸ் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை

ஜெஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வில் கலந்து கொள்ள முடியும். 2017 ஏப்ரல் 28ம் தேதியிலிருந்து 2017 மே 2ம் தேதி வரை ஜெஇஇ அட்வான்ஸ் தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு 2017 மே 21ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை முதல் தாள் தேர்வு மற்றும் 2 மணி முதல் 5 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு என இரண்டுப் பகுதியாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டினை மே 10ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை ஆன்லைனிலிருந்துப் பெற்றுக் கொள்ளலாம். ஆப்லைன் நுழைவுச் சீட்டு கிடையாது.

ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுள் முதல் 1,50,000 இடங்களில் வரும் மாணவர்கள் மட்டுமே ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுத முடியும். ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தியாவிலுள்ள உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்ப நிறுவனங்களான ஐஐடி மற்றும் ஐஎஸ்எம் தன்பாத் போன்ற நிறுவனங்களில் சேர்ந்து கல்விக் கற்கும் வாய்ப்பினை பெறுவார்கள். மேலும் தகவல் பெற www.jeeadv.ac.in என்ற இணயதளத்தைப் பார்க்கவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Ministry of Human Resource Development, Government of India and Central Board of Secondary education (CBSE), New Delhi introduced the national level common entrance exam called Joint Entrance Examination (JEE). The Joint Entrance Exam will be conducted in two parts, JEE Mains and JEE Advanced.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+