பூனை தெரியும்.. "CAT" தெரியுமா...??

Posted By:

சென்னை : காமன் அட்மிஷன் தேர்வு எனப்படும் சிஏடி தேர்வு வணிகம் நிர்வாகம் (எம்.பி.ஏ) போன்ற மேற்படிப்புகளில் சேருவதற்காக தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வாகும். இது ஐஐஎம் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வினை அனைத்து இளங்கலை பட்டதாரிகளும் எழுதலாம். சிஏடி தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் தேர்வாகும். இந்தத் தேர்வினை ஆண்டு தோறும் சுமார் 2 லட்சம் பேர்கள் எழுதுகிறார்கள். சிஏடி தேர்வு இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.

சிஏடி தேர்வு 2017 டிசம்பர் மாதம் நடைபெறும் என ஐஐஎம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்படும். அவற்றிற்கு 300 மார்க்குகள் வழங்கப்படுகின்றன. சிஏடி தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். சிஏடி தேர்வில் மூன்று பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

பூனை தெரியும்..

முதல் பகுதி - தரவு விளக்கம் மற்றும் தர்க்க ரீதியான காரணங்கள் பற்றிய பகுதியிலிருந்து 32 கேள்விகள் 96 மார்க்கிற்கு கேட்கப்படும்.

இரண்டாம் பகுதி - அளவு சார்ந்த திறன் பகுதியிலிருந்து 34 கேள்விகள் 102 மார்க்கிற்கு கேட்கப்படும்.

மூன்றாம் பகுதி - வாய்மொழித்திறன் மற்றும் படித்தல் காம்ப்ரஹென்சன் ஆகிய பகுதியிலிருந்து 34 கேள்விகள் 102 மார்க்கிற்கு கேட்கப்படும்

மொத்தம் 100 கேள்விகள் 300 மார்க்கிற்கு கேட்கப்படும். மேலும் சரியான ஒவ்வொரு விடைக்கும் 4 மார்க்குகள் வழங்கப்படுகின்றன. தவறான ஒவ்வொரு விடைக்கும் நெகட்டிவ் (1) மார்க் உண்டு.

சிஏடி தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை -

காமன் அட்மிஷன் தேர்வு எனப்படும் சிஏடி தேர்வு வணிகம் நிர்வாகம் (எம்.பி.ஏ) போன்ற மேற்படிப்புகளில் சேருவதற்காக தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வாகும். இது ஐஐஎம் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. சிஏடி தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் தேர்வாகும்.

தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் - 2017 ஆகஸ்ட் மாதம் முதல் 2017 செப்டம்பர் மாதம் வரை விண்ணப்பிக்கலாம்.

சிஏடி தேர்விற்கான நுழைவுச் சீட்டினை 2017 நவம்பர் மாதம் முதல் ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு நடைபெறும் நாள் - 2017 டிசம்பர் மாதம்

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை நன்கு வாசித்து விட்டு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பித்ததை சமர்ப்பிப்பதற்கு முன்பாக ஒன்றுக்கு இரண்டு முறை சரிப்பார்த்து விட்டு சமர்ப்பிக்கவும்.

சரியான மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்னை விண்ணப்பப்படிவத்தில் கொடுக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் -

பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் rs. 1500/- வசூலிக்கப்படுகிறது.
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் rs. 850/- வசூலிக்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைன் மற்றும் நெட்பேங்க் மூலமாகவும் செலுத்தலாம்.

www.iimcat.ac.in என்ற இணையதள முகவரியிலிருந்து சிஏடி தேர்விற்கான விண்ணப்பப்படிவத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.

English summary
CAT (Common Admission Test) is a national level entrance examination, which is conducted for admission to management programmes in Indian Institutes of Management (IIM's) and top B-Schools across the country.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia