மாணவர்கள் பிரச்சனைகள் அத்துடன் ஆசிரியர்கள் அலட்சியம் என்னவாகும் நமது தேசத்தின் எதிர்காலம்

Posted By:

அரசுபள்ளிகளில் ஆசிரியர்கள் அலட்சியம் மாணவர்களின் அராஜகம் அத்துமீறும் மாணவர்கள் அறியாமையில் பெற்றோர் என்ன செய்வது என திகைக்கும்  பள்ளிகள் எதிர்காலத்தில் மாணவர்கள் கதி என்னவாகும் எனற கேள்விகள் எழுந்துள்ளன.

மாணவர்களின் ஒழுங்கற்ற போக்கு ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கும் பள்ளிகள்

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் :

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சரியான பராமரிப்பு இல்லாத நிலை ஏற்படுகின்றது. அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலும் சரியான நேரத்திற்கு வருகை தருவதில்லை.

மாணவர்கள் நேரத்திற்கு வருகை தந்தாலும் ஆசிரியர் இல்லாத காரணத்தால் மாணவர்கள் சரியான வழிகாட்டுதல்கள் இன்றி பள்ளிகளில் ஒழுங்கு முறை வழிக்காட்டுதல்கள் இல்லாமல் விளையாட்டுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் . விளையட்டில் ஆரோக்கியமான போக்குகள் இருப்பதில்லை அதனால் கட்டுபாட்டுகள் இல்லாமல் மாணவர்கள் ஒருவர்க்கு ஒருவர் அடித்து கொள்ளும் நிலை ஏற்படுகின்றது. மாணவர்கள் சரியாக பராமரிக்கப்படாமல் இருக்கும் அவல நிலை ஏற்படுகின்றது.

ஆசிரியர்கள் நேரத்திற்கு வருவதில்லை மாணவர்களிடையே பயன்படுத்தும் வார்த்தைகள் மிகுந்த கேவலமான வார்த்தைகள் மாணவர்களிடையே ஏமாற்றத்தை கற்றுக் கொடுக்கிறது .

மக்கு சனியனே, ஏன் நியெல்லாம் ஸ்கூலுக்கு வர்ர அத்துடன் எருமை மாடே என்ற ஏக வசனங்கள் பள்ளி மாணவர்கள் மீது வீசியெரியப்படுகிறது. இது சரியான போக்கு அல்ல அத்துடன் மாணவர்களை கண்டிக்கிரேன் பேர்வழி என கடுமையாக மூர்க்கதனமாக நடந்து கொள்கின்றனர்.

வீட்டில் படிக்காத பெற்றோர்களிடமும் சரியான வாழ்வியல் பாடங்களை கற்க முடியாத பிள்ளைகள் எப்படி பள்ளியில் முறையில்லாத ஆசிரியர்களிடம் கற்றுகொள்ளும் என்பதை குறித்து யாரும் கவனிப்பதில்லை.

பாடங்கள் அரசு பள்ளியில் ஒரு சில ஆசிரியர்களை தவிர மற்ற ஆசிரியர்கள் முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் முடிப்பதில்லை ஆதலால் மாணவர்களிடமும் படிக்கும் ஆர்வம் இருப்பதில்லை.

கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து தட்டிக் கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டிக் கொடுத்து பாடங்களை வாழ்வியலாக நடத்தும் ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே பற்றாகுறையாகவுள்ளது.

பெற்றோர்கள்:

பெறோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது நிறைய இருக்கு அவற்றை முறைப்படி செய்ய வேண்டும். ஆனல் நிரைய பெற்றோர்கள் அன்றாட வாழ்வு பிழைப்பிற்கு உழைத்து தேயுன் நிலையில் பிள்ளைகளுக்கு எதை கொடுக்க வேண்டும் . எதனை கற்றுக் கொடுக்க கூடாது என்ற எந்த தெளிவுமற்ற நிலையில் பெற்றோர்கள் இருக்க மாணவர்கள் கேட்பாரற்ற நிலையில் தவறுகள் சகஜமாக செய்கின்றனர்.

சமுதாயம் :

பெற்றோர்கள் சரியற்ற நிலையில் பிள்ளைகள் சரியாக இருக்க வேண்டும் என எதிர்ப்பார்த்தால் எப்படி நடக்கும். அத்துடன் சமுதாயத்தில் நடக்கும் வண்முறைகள் கலாச்சாரம் , ஊடகங்களின் நாகரிகமற்ற போக்கு , முறையற்ற நட்பு பழக்க வழக்கங்களால் பள்ளி , வீடு , சமுதாயம் பற்றாகுறைக்கு மொபை கலாச்சாரம் இது மாணவர்களை கெடுத்து குட்டிச்சுவாராக்குகின்றது அவர்களது வாழ்வை மிகுந்த சிக்கலுக்குள்ளாக்குகின்றது.

வாட்சப், பேஸ்புக் , இன்ஸ்டிராகிராமில் வழிதவறி போகும் மாணவர்கள் , வகுப்பறைக்கு சரியாக வருவதில்லை ஆரம்பத்தில் கட்டுகோப்பாக வளர்க்க முடியாத பிள்ளைகளை பதின் பருவதில் செய்யும் தவறுகளை தட்டிகேட்டு தடாலடியாக தண்டித்தால் அம்மாணவர்கள் வன்முறையையை கையாள்கிறார்கள் என குற்றம் சாட்டுகிறோம்.

முதலில் பள்ளி கட்டிடம் ஆசிரியர்கள், மாணவர்கள் ,பெற்றோர்கள், ஊடகங்கள், தொலை தொடர்பு சாதனங்கள் , கூடா நட்புகள், என நிறைய சரி செய்ய வேண்டிய பொருப்பு நமது அனைவரின் பொருப்பாகும்.

சார்ந்த பதிவுகள் :

ஆசிரியர்க்ள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறையால பள்ளிகள் தவிப்பு ! 

அரையாண்டு தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான மாணவர்கள் குறிப்பு

English summary
here article tell about issues of students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia