விளையாட்டு வீரர்களுக்கு மேற்கு மண்டல ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

By Vasu Shankar

சென்னை: விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டின் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை மேற்கு மண்டல ரயில்வே(வெஸ்டர்ன் ரயில்வே) அறிவித்துள்ளது.

மொத்தம் 64 பணியிடங்களுக்கான வாய்ப்பை அறிவித்துள்ளது மேற்கு மண்டல ரயில்வே.

விளையாட்டு வீரர்களுக்கு மேற்கு மண்டல ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

தடகளம், கிரிக்கெட், கபடி, கோ-கோ, வாலிபால், மல்யுத்தம், நீச்சல், பூப்பந்து, கோல்ப், பேட்மிண்டன், கால்பந்து, வலுதூக்குதல், டேபிள்டென்னிஸ், பளுதூக்குதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்பு, பிளஸ்2, 10-ம் வகுப்பு, மெட்ரிக் படித்த மாணவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பம் செய்யலாம். வயது 18 முதல் 25 வயதுக்குள்ளாக இருக்கவேண்டும்.

விண்ணப்பங்கள் கிடைத்த பின்னர் அதில் தகுதியானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

இந்தப் பணிகளுக்காக விண்ணப்பத்தை Western Railway Sports Association, Headquarter Office, Churchgate, Mumbai - 400020 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேருமாறு அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.wr.indianrailways.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு அறியலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    English summary
    Western Railway has invited applications to filling for 64 sportsperson under sports quota. Interested and Eligible candidate can apply for the post. Along with application necessary documents should be sent to the following address: Sr. Sports Officer, Western Railway Sports Association, Headquarter Office, Churchgate, Mumbai - 400020 Last Date of Submission: 17th August 2015.

    உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
    Tamil Careerindia

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more