நாட்டின் 14வது குடியரசுத் தலைவரை வரவேற்று அவரின் வாழ்க்கை வரலாறு அறிவோம்

Posted By:

இந்தியாவின் முதல் குடிமகனாக கருதப்படும் குடியரசுத் தலைவர் பதவியில் அமரும் இராம்நாத் கோவிந்த்  அவர்களுக்கு நமது கரியர் இந்தியா சார்பில் வணக்கங்களுடன்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம் .

நாட்டின் 14வது குடியரசுத் தலைவர் கடந்து வந்த பாதை

 

நமது குடியரசு தலைவர் இராம்நாத்கோவிந்த் அவர்கள் இந்தியாவின் 14வது குடியரசு தலைவராக வெற்றிபெற்றுள்ளார் . இந்தியாவின் முதல் குடிமகனாக விளங்கும் குடியரசு தலைவர் பதவியேற்கும் அவரைப்பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும் .

இந்திய குடியரசு தலைவர் பதவியில் அமரும்  இராம்நாத் அவர்களின் வாழ்க்கை பயணம் இந்திய இளைஞர்களான நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது ஆகும். இந்திய இளைஞர்களுக்கு அவர் ஒரு பாடமாக விளங்குகிறார். விவசாயியின் மகனாக பிறந்து இன்று இந்நாட்டின் குடிமகனாக விளங்குகிறார்.

நாட்டின் 14வது குடியரசுத் தலைவர் கடந்து வந்த பாதை

 

இந்திய விடுதலைக்கு முன் பிரிக்கப்படாத இந்தியாவில் 1945 அக்டோபர் 1 அன்று திரு.இராம்நாத் கோவிந்த் அவர்கள் உத்திரபிரதேசத்தில் கான்பூர் பகுதியில்  பிறந்தார். இவர் வணிகவியல் பட்டம் பெற்றார் அத்துடன் எல்எல்பி சட்டப் படிப்பினை டிஏவி கல்லுரியில் பயின்றார். இந்திய ஆட்சிப்பணி தேர்வில் வெற்றி பெற டெல்லி சென்று தனது மூன்றாவது அட்டம்ட்டில் இந்திய ஆட்சிப்பணி வென்றார். ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர் பதவி கிடைக்கவில்லை ஆதலால் அவர் அந்த பணியை தொடரவில்லை .

ராம்நாத்கோவிந்த் தனது வழக்குரைஞர் பயிற்சியை தொடங்கி  டெல்லியில் 1971ல்  பார்கவுன்சிலில் தன்னை பதிவு செய்தார். இவர் வழக்குரைஞராக சமுதாயத்தில் பின்னடைவு அடைந்த பகுதியில் வாழும் வசதி குறைந்த பிரிவு மக்களுக்காக சட்ட உதவி செய்தார். டெல்லியில் வாழ்ந்த பெண்களுக்கும் ஏழை மக்களுக்கும் சட்ட ஆலோசனை வழங்கினார். பெருமைக்குரிய மனிதராக இருந்தார் அத்துடன் இவர் மொராஜிதேசாய்  பிரதமராக இருந்த ஆட்சிக்காலத்தில்  பிரதமரின் தனிப்பட்ட சட்ட ஆலோசகராக 1977- 1978 வரை பணியாற்றினார் . மேலும் 1977 முதல் 1979 வரை
மத்திய அரசின் வழக்குரைஞராகவும் பணியாற்றினார். 1980 முதல் 1983ல் அவர் மத்திய அரசின் கவுன்சிலில் இருந்தார் .

இத்தகைய சிறப்புகளும் அனுபவமும் பெற்றவர் 1991ல் பாராத ஜனதா கட்சியில் இணைந்தார். 35 வது பீகார் கவனராக இருந்த பெருமையுடைய ராம்நாத்கோவிந்த அவர்கள் மிகசிறந்த பொருப்பை பெற்றார். இன்று நமக்கு ஒரு பெரிய வழிகாட்டியாக விளங்குகிறார் .

 

English summary
here article tell about president of India and his education qualification

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia