ஆன்லைன் வாயிலாக பி.காம்., எம்.காம்., படிக்க விருப்பம்?

ஒரு வைரஸ் ஓட்டுமொத்த இயக்கத்தையும் புரட்டி போட்டதை, உலக நாடுகள் ஒரு போதும் மறக்காது; அதேபோல வரலாற்றில் முக்கிய பேரிடராக பதிவானதை, பல தலைமுறைகள் படித்தறியும்.

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட துறைகளில் முக்கிய இடம் கல்விக்கு உள்ளது.பெருந்தொற்றானது, கல்வித் துறையில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட வழிவகுத்தது என்றே கூறலாம்.

ஆன்லைனில் படிக்க விருப்பம்?

தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரையிலான கற்றல் செயல்முறையை, கையடக்கத்தில் கொண்டு வந்தது.

உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் எங்கிருந்தும் கல்வி கற்கலாம் என்ற நிலையை, 'டிஜிட்டல் கல்வி' முறை ஏற்படுத்தியது.

அந்த வரிசையில், அறிவியல், பொறியியல், கலை உள்ளிட்ட படிப்புகளை ஆன்லைனில் வழங்க போட்டி போட்டு முன்னணி கல்வி நிறுவனங்கள் அறிவிப்பை கொட்டி கொண்டு இருக்கின்றன.

குறிப்பாக, கலை மற்றும் அறிவியல் படிப்புகளை பொறுத்தவரை, அவர்கள் படிக்கும் துறை மட்டுமல்லாமல் எந்த துறையிலும் நிச்சயம் வேலைவாய்ப்பு உண்டு.

அதில், வணிகவியல் துறைக்கு பிரதான இடம் உண்டு. அந்த படிப்புகளை நேரடி வகுப்புகள் தவிர்த்து, ஆன்லைனில் கல்வி நிறுவனங்கள் வாரி வழங்குகின்றன.

காம் தகுதிகள் அறிய விருப்பம்?

மூன்று ஆண்டு படிப்பான இதை படிக்க 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். இந்த படிப்பு வணிகவியலில் ஒரு ஆழமான அறிவை புகட்டும்.

இந்த வகையான படிப்பை கல்லூரியில் சென்று படிக்கலாம் அல்லது தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தே கூட படிக்கலாம்.

பி.காம்., முடிக்கும் பட்சத்தில் வேலை வாய்ப்பை பெற முடியும். இதை முடிப்பதின் மூலம் எம்.காம்., படிக்க தகுதி பெறுவதோடு, வங்கி, வணிக வளாகங்கள், போன்ற பல்வேறு இடங்களில் பணிபுரியலாம். ஆரம்பகட்ட ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை பெற முடியும்.

கணக்கியல் அல்லது நிதி நிர்வாகத்தில் வணிகவியல் இளங்கலை படிப்பு சிறந்த தேர்வாக இருந்தால், வாய்ப்புகள் பிரகாசம் என்கின்றனர் கல்வியாளர்கள்

ஆன்லைனில் படிக்க விருப்பம்?

எ.காம் தகுதிகள் அறிய விருப்பம்?

மாஸ்டர் ஆஃப் காமர்ஸ் என்பது வணிகவியல், கணக்கியல், மேலாண்மை மற்றும் பொருளாதாரம் தொடர்பான பாடங்களில் கவனம் செலுத்தும் முதுகலை பட்டமாகும்.

பி.காம் படிக்கும்போதே, எம்.காம் படிப்புகளையும் படிக்கும் வசதிகளும் உள்ளன. தமிழகத்தில் அமிட்டி பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய கல்வி நிறுவனங்கள், வணிகவியலில் இளங்கலை, முதுகலை படிப்புகளை ஆன்லைனில் வழங்கி வருகிறது.

2022-23ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, தற்போது பிரதான கல்வி நிறுவனங்கள் தீவிரப்படுத்தியுள்ளன.

வணிகவியல் பாடப்பிரிவை பொறுத்தவரை, முதுகலை படிப்பில் ஒரு குறிப்பிட்ட பிரிவை தேர்வு செய்து, அதில் கூடுதல் கவனம் செலுத்தினால், அதில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பில் உங்களுக்கான இடத்தை யாரும் தட்டி பறிக்க முடியாது என்பதை மறக்க வேண்டாம் யூத்ஸ்...!

அதேபோல வணிகவியலில் குறுகிய கால பாடப்பிரிவுகளையும் ஆன்லைன் வாயிலாக படிக்கும் முடியும் என்பதை மறக்காதீங்க...!

இதுகுறித்த முழு விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக, நாங்கள் தெரிவிக்காத தகவல்களையும் அறிய முடியும். Click here for courses.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Pandemic has shown us that education has also shrunk in hand. After the pandemic, students are showing interest in joining arts and science courses online rather than face-to-face classes.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X