நண்டு பிடிக்க தெரிஞ்சா ரூ.35 ஆயிரம்...!

நாட்டில் மீன்வளத் துறையில் ஒருமித்த கவனம் செலுத்தி, நீடித்த வளர்ச்சி காண, 'பிரதான் மத்ஸ்ய சம்பட யோஜ்னா' என்ற முன்னோடி திட்டத்தை, மத்திய அரசு அறிவித்து, செயல்படுத்த தொடங்கியுள்ளது.

 

இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) காலியாக உள்ள ஐந்து பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நண்டு பிடிக்க தெரியும்?

நிர்வாகம்: தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்

மேலாண்மை: தமிழக அரசு

காலியிடங்கள்: 5

விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.09.2022

பணியிடங்கள் விவரங்கள்

மீனவர்கள்(Fishermen)

மொத்தம் நான்கு பணியிடங்கள் உள்ளன. அந்த பணியிடங்களுக்கு, அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பள்ளியில், 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

 

அனுபவம்

நண்டு பிடிப்பது மற்றும் கையாளுவதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது

அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்

மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குஞ்சு பொரிப்பக மேலாளர் (Hatchery Manager)

இந்த பணிகளுக்கு ஒரு இடம் காலியாக உள்ளது.

அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில், B.F.Sc, M.F.Sc அல்லது M.Sc Biological Science பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் - நண்டு பிடிப்பதில் அனுபவம் வேண்டும்.

அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மாதம் ஊதியமாக ரூ.35 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நோ எக்ஸாம்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலின்போது, தங்களது விண்ணப்பத்துடன் (பயோடேட்டா) அறிவிப்பில் கூறப்பட்ட தகுந்த ஆவணங்களின் நகலை இணைத்து, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ள நேர்காணலுக்கு வரும் போது உடன் எடுத்து வந்து சமர்பிக்க வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையிலான காலிப் பணியிட வாய்ப்பு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் 14.09.2022 அன்று நடைபெறவுள்ள நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நேரம், தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பு வாயிலாக தெரிந்து கொள்ளவும்.

ஒரு முறை படித்து பாருங்களேன் மறக்காம...!

https://www.tnjfu.ac.in/

https://drive.google.com/file/d/1N59DKQi8dU4T5gumo31Ps0OCQZVvPIwN/view

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Dr. J. Jayalalitha Fisheries University invites applications for Fishermen, Hatchery Manager vacancies.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X