கோடை விடுமுறையா.. விடுமுறையிலும் பல அர்த்தமுள்ள செயல்களை செய்யலாம்.. வாய்ஸ் கல்ச்சர் ஸ்டுடியோ!

Posted By: Kalai Mathi

சென்னை: கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் குரலிசைப்பயிற்சிக்காக வாய்ஸ் கல்ச்சர் ஸ்டுடீயோவில் பிரத்யோகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று பயனடைந்து வருகின்றனர்.

வாய்ப்பாட்டு எனப்படும் குரலிசைப்பயிற்சியில் தற்போது பெரும்பாலானோரால் அதிகம் முணுமுணுக்கப்படும் சொல் வாய்ஸ் கல்ச்சர்... வாய்ஸ் கல்ச்சர் என்றால் என்ன?

கோடை விடுமுறையா.. விடுமுறையிலும் பல அர்த்தமுள்ள செயல்களை செய்யலாம்.. வாய்ஸ் கல்ச்சர் ஸ்டுடியோ!

குரலிசை பயிற்சி பெறுபவர்கள் தாங்கள் சார்ந்த மற்றும் விரும்பிய இசைமுறைகளை மட்டுமே கற்று, அதன் மூலம் பாடகர்களாக பரிணமிக்கின்றனர். அவ்வாறு பல ஆண்டுகள் ஒரே ஒரு இசை முறையில், குறிப்பாக கர்நாடக இசையோ, ஹிந்துஸ்தானி இசையோ அல்லது மேற்கத்திய க்ளாசிக்கல் இசையோ இவற்றைத்தான் கற்று வருகின்றனர்.

இதன் மூலம் இவர்கள் இந்த ஒரு முறைகளில் ஒன்றினில் நன்றாக பாடுகின்றனரே அன்றி, அனைத்து இசைமுறைகளையும் எளிதாக கையாளும் திறன் வாய்க்கப்பெறுவதில்லை. ஆனால் திரைப்படம் போன்ற வெகுமக்கள் கலை ஊடகங்களில் பன்முகக்கலைஞராக இருப்பதையே பெரும்பாலும் எல்லோரும் விரும்புவர்.

ஆனால் அவ்வாறு பாடக்கூடியவர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். அண்மைக்காலங்களில் அப்படி பாடியவர்களென எஸ்பிபி மற்றும் ஜானகியை கூறலாம்.மற்றவர்களெல்லாம் பெரும்பாலும் ஒரு சில இசைமுறைகளை மட்டுமே நன்றாக பாடத்தெரிந்தவர்களாக இருந்து வருகின்றனர்.

கோடை விடுமுறையா.. விடுமுறையிலும் பல அர்த்தமுள்ள செயல்களை செய்யலாம்.. வாய்ஸ் கல்ச்சர் ஸ்டுடியோ!

அவ்வாறானவர்களைக்கூட அனைத்து இசைமுறைகளையும் பாட வைக்கச்செய்வதுதான் வாய்ஸ் கல்ச்சர் எனப்படும் குரல் மேம்பாட்டு திறன் பயிற்சி. இந்த புதுமையான பயிற்சி முறையை கடந்த சில காலமாக உலகத்தரத்துடன் அளித்து வரும் நிறுவனம் வாய்ஸ் கல்ச்சர் ஸ்டுடியோ நிறுவனம்.

இவர்களின் பயிற்சி பொதுவான ஒன்றாக இல்லாமல் கற்றுக்கொள்ளும் மாணவரின் திறனறிந்து அதற்கேற்றார் போல் தனித்தன்மையுடன் அளிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த பயிற்சி பெற்று குரல் மேம்பாடு அடைந்துவருகின்றனர்.

இதுவரை வாராந்திர சிறப்பு வகுப்புகளாக மட்டுமே நடத்தப்பட்டு வந்த இந்த பயிற்சியானது, இனி முழுநேர டிப்ளமோ பட்டப்படிப்பாகவும் நடத்தப்பட உள்ளது. இது குரலிசையில் தங்களை மேம்படுத்தி கொள்ள விரும்புபவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும்.

கோடை விடுமுறையா.. விடுமுறையிலும் பல அர்த்தமுள்ள செயல்களை செய்யலாம்.. வாய்ஸ் கல்ச்சர் ஸ்டுடியோ!

மேலும் கோடை விடுமுறை பயிற்சியாக சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இங்கு பயிற்சி பெறும் அனைவரும், திரையிசைத்துறையின் பல்வேறு வல்லுனர்களை சந்தித்து அனுபவங்களை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுகிறது.

திரையிசை மட்டுமின்றி கிராமிய இசை, கர்நாடக, ஹிந்துஸ்தானி மற்றும் மேற்கத்திய இசையின் பல்வேறு நிபுணர்களும் இங்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கின்றனர். டிப்ளமோ பயிற்சியின் நிறைவில் மாணவர்கள் ஒவ்வொருவரும் புதிதாக இசையமைக்கப்பட்ட ஒரு பாடலை பாடும் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இது திரைப்பட பின்னணி பாடலைப்பாடக் கூடிய ஒரு அனுபவத்தினை அவர்களுக்கு வழங்குகிறது. வாய்ஸ் கல்ச்சர் ஸ்டுடியோவில் சேர்ந்து உங்கள் இசை வாழ்வை முழுமையாக வாழுங்கள்..

English summary
In Chennai Voice culture studio gives special voice training for the students who are all interested in the Summer vacation. Hundreds of students have benefited from the training.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia