நாக்பூர் விஎன்ஐடி-யில் எம்.எஸ்சி படிக்க ஆசையா....!!

Posted By:

டெல்லி: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலுள்ள விஎன்ஐடி கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2 ஆண்டு படிப்பான இதில் சேர்வதற்கு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

நாக்பூர் விஎன்ஐடி-யில் எம்.எஸ்சி படிக்க ஆசையா....!!

இந்தப் படிப்பில் சேர்வதற்கு மாணவ, மாணவிகள் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்குக் கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படும்(பொது மற்றும் ஓபிசி பிரிவினர்). எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய http://210.212.165.248/admission/ என்ற லிங்க்கைக் கிளிக் செய்யவும்.

ஐஐடி-ஜேஏஎம் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ, மாணவிகள் இங்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். கவுன்சிலிங் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்கும். ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனப்ப மே 20 கடைசி நாளாகும். ஹால் டிக்கெட்டுகள் மே 28-ம் தேதி வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து மே 29-ல் நுழைவுத் தேர்வு நடைபெறும்.

நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

English summary
Applications are invited by Visvesvaraya National Institute of Technology (VNIT), Nagpur for admission to 2 years Master of Science (M.Sc) programmes. Programmes are offered in the following subjects: Physics, Chemistry and Mathematics for the academic year 2016-17. Eligibility Criteria: Candidates must have completed B.Sc/bachelors degree with minimum 60% marks aggregate or equivalent grade (55% in case of candidates from reserved category (SC/ST/PWD)) with Physics/ Chemistry/ Mathematics as one of the compulsory subject Candidate appearing for the final year B.Sc are also eligible to apply

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia