விசாகப்பட்டினம் துறைமுகத்தில் அக்கவுன்ட்ஸ் அதிகாரி பணியிடங்கள்!!

Posted By:

புதுடெல்லி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள துறைமுகத்தில் அக்கவுன்ட்ஸ் அதிகாரி, மூத்த அக்கவுன்ட்ஸ் அதிகாரி பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 12-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் அக்கவுன்ட்ஸ் அதிகாரி பணியிடங்கள்!!

மொத்தம் 6 பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன. அக்கவுன்ட்ஸ் அதிகாரி பணியிடங்கள் 4-ம், மூத்த அக்கவுன்ட்ஸ் அதிகாரி பணியிடங்கள் 2-ம் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சிஏ படித்திருக்கவேண்டும். மேலும் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுன்டண்ட்ஸ் ஆஃப் இந்தியாவில் (ஐசிஏஐ) பதிவு செய்திருக்கவேண்டும்.

வயது 30-க்கு மிகாமல் இருக்கவேண்டும். மூத்த அக்கவுன்ட்ஸ் ஆபீஸர் பணியிடங்களுக்கு வயது 35-க்கு மிகாமல் இருக்கவேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுச் சலுகைகள் உண்டு.

சம்பளம் ரூ. 20600-46500/ என்ற அளவில் வழங்கப்படும். விசாகப்பட்டினம் துறைமுகத்தில் அவர்கள் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பங்களை The Secretary, Visakhapatnam Port Trust, Visakhapatnam-530035. என் முகவரிக்கு ஏப்ரல் 12-ம் தேதிக்குள் அனுப்பித் தரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.vizagport.com/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Visakhapatnam Port Trust has released a notification on the recruitment happening. Visakhapatnam Port Trust is looking out for 6 Accounts Officer & Senior Accounts Officer Posts. Details of this recruitment is listed below. Notification Details: Advertisement no: 04/2016 Name of the Post and Number of Posts: 1. Accounts Officer: 4 Posts. 2. Sr. Accounts Officer: 2 Posts. Who is Eligible for the Visakhapatnam Port Trust? Qualification: Candidates interested to apply for the above post must be qualified as per the organisations requirement. Qualification becomes manadatory to test the skills and their perseverance in doing a certain job.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia