விஐடி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படிக்க போகலாமா....!!

Posted By:

டெல்லி: நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் முன்னணியில் உள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (விஐடி) எல்எல்பி படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

5 ஆண்டு ஒருங்கிணைந்த இந்த பி.ஏ. எல்எல்பி படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதைப் போலவே பிபிஏ எல்எல்பி படிப்புகளையும் விஐடி வழங்குகிறது.

விஐடி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படிக்க போகலாமா....!!

இந்தப் படிப்பு படிக்க மாணவ, மாணவிகள் இந்தியர்களாக இருக்கவேண்டும். இந்தப் படிப்பை முழு நேர படிப்பாகவோ அல்லது பகுதி நேரப் படிப்பாகவோ படிக்கலாம். 2016-ம் ஆண்டுக்கான படிப்பாகும் இது. தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் சென்னையிலுள்ள விஐடி லா ஸ்கூலில் சேர்க்கப்படுவர்.

12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் படிப்பில் சேர முடியும். மேலும் மாணவர்கள் 1996-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்கவேண்டும். மேலும் மாணவர்கள் சிஎல்ஏடி, எல்எஸ்ஏடி உள்ளிட்ட சட்டப் படிப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் ரூ.600 செலுத்தி ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை தபாலில் பெற விரும்புபவர்கள் ரூ.600 கேட்புக் காசோலையை அனுப்பலாம்.

விண்ணப்பங்கள் ஜூன் 3-ம் தேதி வரை விநியோகம் செய்யப்படும். விண்ணப்பங்களைப் பெற கடைசி தேதி ஜூன் 6 ஆகும். நேர்முகத் தேர்வு ஜூன் 18-ம் தேதியாக இருக்க வாய்ப்புள்ளது.

English summary
Applications are invited by Vellore Institute of Technology (VIT), Vellore for admission to 5 years integrated Bachelor of Arts Bachelor of Law (B.A LL.B) honours and Bachelor of Business Administration Bachelor of law (BBA LL.B) honours programmes. Admissions are offered at VIT Law School, Chennai for the session 2016. Eligibility Criteria: Candidate must be a Indian national and should have studied full time and formal education in the preceding two years in schools located in India Candidate should have passed higher secondary examination conducted by the State/Central Board of Secondary Education or its equivalent examination with a minimum of 70% overall aggregate Candidates whose date of birth falls on or after 1st July 1996 are eligible to apply

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia