விஐடி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க ஆர்வமா இருக்கா?

Posted By:

சென்னை: இந்தியாவிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில்(விஐடி) எம்பிஏ படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இந்த படிப்புகளை வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்திலும், சென்னை வளாகத்திலும் படிக்க முடியும். இந்தப் படிப்புகள் 2016-ம் ஆண்டில் தொடங்கும்.

2 வருட படிப்பாகும் இது. ஃபைனான்ஸ், மார்க்கெட்டிங், ஹியூமன் ரிசோர்சஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் சிஸ்டம்ஸ், இன்டர்நேஷனல் பிஸினஸ் ஆப்பரேஷன்ஸ், பிஸினஸ் அனாலிடிக்ஸ் எலிஜிபிலிட்டி ஆகிய பிரிவுகளில் எம்பிஏ படிக்கலாம்.

இந்த படிப்பு பயில அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

CAT / XAT / MAT / GMAT / CMAT தேர்வுகளில் நல்ல ஸ்கோர் செய்திருக்கவேண்டும்.

விஐடி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க ஆர்வமா இருக்கா?

கல்வித் தகுதி, வேலை பார்த்த அனுபவம், விருதுகள், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்பிஏ படிப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதியாகும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை மார்ச் 6-ம் தேதி நடைபெறும்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia