மழை வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1.25 கோடி அள்ளித் தந்த விஐடி பல்கலை.!!

Posted By:

சென்னை: மழை, வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.1.25 கோடி நிவாரண நிதியை வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(விஐடி) பல்கலைக்கழகம் தந்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகளைச் செய்ய பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன.

மழை வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1.25 கோடி அள்ளித் தந்த விஐடி பல்கலை.!!

இந்தப் பணிகளில் விஐடி பல்கலைக்கழகமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. நிவாரணப் பணிகளுக்காக ரூ.1.25 கோடியை பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதிக்கு விஐடி பல்கலைக்கழக வேந்தர்-நிறுவனர் விஸ்வநாதன் வழங்கியுள்ளார்.

இந்த நிதியானது பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் அளித்தத் தொகையாகும் என்றார் அவர். அதுமட்டுமல்லாமல் பல்கலைக்கழக ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தையும் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia