விறுவிறு விஐடி..: பி.டெக் நுழைவுத் தேர்வுக்க விண்ணப்பம் விநியோகம் தொடக்கம்!

Posted By:

சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் முக்கிய இடம் வகிக்கும் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.

விஐடி பல்கலைகழகத்தின் வேலூர் மற்றும் சென்னை வளாகங்களில் பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் வேலூர் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கியது.

விறுவிறு விஐடி..: பி.டெக் நுழைவுத் தேர்வுக்க விண்ணப்பம் விநியோகம் தொடக்கம்!

விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூர் வளாகத்தில் 2016-ம் ஆண்டுக்கான பி.டெக், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் (ஸ்பெசலைசேஷன் இன்பயோ இன்பர்மேடிக்ஸ்), சிவில், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், இசிஇ, இஇஇ, ஐடி, மெக்கானிக்கல் உட்பட பல்வேறு பொறியியல் பட்டப் படிப்புகளில் சேருவதற்கும் நுழைவுதேர்வு நடத்தப்பட உள்ளது.

நாட்டில் உள்ள 118 முக்கிய நகரங்களிலும், துபாய், குவைத் மற்றும் மஸ்கட் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஆன்லைன் முறையில் இந்த நுழைவுத்தேர்வு நடக்கிறது. அதன்படி நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நாடு முழுவதும் 92 தலைமை தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.990 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். அதோடு Director UG Admission VIT University என்ற பெயரில் ரூ.990 வங்கி வரைவு காசோலை செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.vit.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ரூ.960 செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். இந்நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி மாதம் 29-ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் விவரங்கள் அறிய www.vit.ac.in என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம் என விஜடி அறிவித்துள்ளது.

English summary
VIT university, Vellore has announced the date of its VIT engineering entrance test for 2016. The entrance exam is supposed to be in the first week of April, 2016. A pioneer institute in engineering , VIT aspire to establish a system of quality assurance, which evaluates and monitor the quality of education and training imparted to the students. It has an improved teaching-learning process which has developed the Institute as a center of excellence.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia