செய்யும் தொழிலே தெய்வம்: ஐஐஎம் மாணவர்களை பேசி அசத்திய வைஸ் அட்மிரல்!!

Posted By:

சென்னை: செய்யும் தொழிலே தெய்வம். அதை மாணவர்கள் உணர வேண்டும் என்று கடற்படை வைஸ்அட்மிரல் சதீஷ் சோனி தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்டில்(ஐஐஎம்) நடைபெற்ற முதலாவது நிறுவன நாள் விழாவில் சதீஷ் சோனி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: மாணவர்கள் இந்த வயதில் நன்கு படித்து முன்னேற வேண்டும். புதிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நாட்டை தன்னிறைவு பெறச் செய்யவேண்டும்.

செய்யும் தொழிலே தெய்வம்: ஐஐஎம் மாணவர்களை பேசி அசத்திய வைஸ் அட்மிரல்!!

அதற்காக நீங்கள் சரியான வேலையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அந்த வேலையை நீங்கள் மதிக்கவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைக்கவேண்டும்.

அந்தத் தொழில் மூலம் எவ்வளவு பணம் நமக்குக் கிடைக்கிறது என்பதைக் கணக்கிடக்கூடாது. தொழிலை தெய்வமாக மதித்தால் அனைத்து நன்மைகளும் வந்து சேரும்.

செய்யும் தொழிலே தெய்வம்: ஐஐஎம் மாணவர்களை பேசி அசத்திய வைஸ் அட்மிரல்!!

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த கடற்படை தீவிரமாக செயலாற்றி வருகிறது என்றார் அவர்.

கிழக்குக் கடற்படை கமாண்ட்டின் கமாண்டிங் இன் சீஃபாக உள்ளார் சதீஷ் சோனி.

English summary
Flag Officer Commanding-in-chief, Eastern Naval Command, Vice Admiral Satish Soni has advised IIM students here not to look towards salary packages, but respect the profession. Stressing on imbibing good values, he advised the budding management graduates not to look primarily towards salary packages, but respect the profession to succeed in life and contribute to the welfare of the society. Hard work and sincerity are very important to improve skills and for personality development, he said, addressing the first foundation day of the Indian Institute of Management (IIM), Visakhapatnam, here last night. "A person must respect his profession and should not measure the work by how much he is earning," he said.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia