சென்னையில் வெற்றி நிச்சயம் வழிகாட்டுதல் நிகழ்ச்சி... ஏப்ரல் 9ல்!

Posted By:

சென்னை : தினத்தந்தி - செயின்ட் பீட்டர்ஸ் கல்விக்குழுமமும் இணைந்து சென்னை ஆவடியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழக வளாக அரங்கத்தில் ஏப்ரல் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாணவர்களுக்கான வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியினை நடத்துகிறது.

வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகள் மற்றும் சந்தேகங்கள் பற்றி விளக்குவதற்காக சிறப்புமிக்க இந்த வெற்றி நிச்சயம் என்கிற நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

இந்த வருடம்

(2017) 16வது ஆண்டாக தமிழகம் முழுவதும் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியினை நடத்த உள்ளனர்.

நடைபெறும் இடம்

16வது வருட வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி சென்னை ஆவடியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழக வளாக அரங்கத்தில் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவ மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

அனுமதி இலவசம்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் காலை 7 மணியில் இருந்தே தங்கள் பெயர்களை நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழக வளாக அரங்கத்தில் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ள வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விபரங்களை அறிந்து கொள்வதற்கு கல்லூரி கல்லூரியாக ஏறி இறங்க அவசியம் இல்லை. வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளளும் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக வெற்றி நிச்சயம் புத்தகம் வழங்கப்படும். அதில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களும் அடங்கியிருக்கும். அது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மாவட்ட ஆட்சியர் தலைமை

சிறப்புமிக்க வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியினை ஏப்ரல் 9ம் தேதி காலை 9 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தலைமை ஏற்று தொடங்கி வைக்கிறார். இதில் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை பல்வேறு துறையை சேர்ந்த பேராசிரியர்களும், வல்லுனர்களும் எடுத்துரைப்பார்கள்.

கல்வியாளர்களின் விளக்க உரை

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் இலவசமாக கலந்து கொண்டு பயன்பெறலாம். எந்த மேற்படிப்பு படிக்க வேண்டும், எப்படி வேலைவாய்ப்பை பெற முடியும் என்று மாணவ மாணவியர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் கல்வியாளர்களைக் கொண்டு விளக்க உரை அளிக்கப்படும்.

இலவச பேருந்து வசதி

செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழக வளாக அரங்கத்திற்கு செல்லுவதற்கு பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகின்றன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து ஏராளமான பஸ்கள் காலை 7 மணியில் இருந்தே விடப்படுகின்றன.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், எண்ணூர், படப்பை, பொன்னேரி, அரக்கோணம், காரனோடை, ஊத்துக்கோட்டை, ஆகிய இடங்களில் இருந்து காலை 6.30 மணி அளவில் பேருந்துகள் புறப்படும். திருவள்ளூர், பெரியபாளையம், மேடவாக்கம், தாம்பரம், ஈஞ்சம்பாக்கம், நங்கநல்லூர், திருவெற்றியூர், ரெட்ஹில்ஸ், பெரம்பூர், ரயில் நிலையம், மின்ட், சென்ட்ரல், எழும்பூர் வடக்கு ரயில் நிலையம், கோயம்பேடு, தியாகராயநகர், அயனாவரம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, வண்டலூர், அண்ணாநகர், புரசைவாக்கம், திருவான்மியூர், கீழ்க்கட்டளை, ராயபுரம், பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய இடங்களில் இருந்து காலை 7 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படும். பூந்தமல்லி, ஆவடி பேருந்து நிலையங்களில் இருந்து 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும்.

 

மாலை பேருந்து

நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்குச் செல்லும் போதும் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பேருந்து வசதிக்குறித்து தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 9444693784, 9442086875, 8608659206, 9445638085 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்களுக்கு மதிய உணவு, காலை மற்றும் மாலை தேநீர், குளிர்பானம், பிஸ்கட் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மேலும் நிகழ்ச்சியில் தேவையானவற்றை குறிப்பு எடுப்பதற்கு வசதியாக பேனா, குறிப்பேடு அடங்கிய போல்டர் இலவசமாக வழங்கப்படும். அனைத்து விபரங்களும் அடங்கியுள்ள வெற்றி நிச்சயம் புத்தகமும் இலவசமாக வழங்கப்படும்.

English summary
Vetri Nichayam, a career guidance Programme 10th and 12th completed students was organized jointly by Daily Thanthi Newspaper and St. Peters University on 9th April 2017 in St. Peters University campus stadium, Avadi.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia