கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு.. பழங்குடியின மாணவி சவுமியா 200க்கு 200 கட்ஆப்

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பழங்குடியின மாணவி சவுமியா 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளார்.

சென்னை : கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில் பழங்குடியின மாணவி சவுமியா 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்று 2வது இடத்தைப் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்பில் 23ஆயிரத்து 21 விண்ணப்பங்கள் வந்தன. இவற்றில் தகுதியான விண்ணப்பங்கள் 20ஆயிரத்து 827 மட்டுமே. ஆனால் கடந்த ஆண்டு 18 ஆயிரத்து 302 பேர் மட்டுமே கலந்தாய்விற்கு விண்ணப்பித்து இருந்தனர்.

கலந்தாய்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று www.tanuvas.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

பொதுக்கல்வி, தொழில்கல்வி பிரிவில் சாதனை

பொதுக்கல்வி, தொழில்கல்வி பிரிவில் சாதனை

ராமநாதபுரத்தைச் சார்ந்த ஆர்.எஸ். கிருத்திகா, தர்மபுரியைச் சார்ந்த பி.சவுமியா, திண்டுக்கல்லைச் சார்ந்த எஸ்.என். ஆர்த்தி, ஈரோட்டைச் சார்ந்த டி.கவின்ராஜ், திண்டுக்கல்லைச் சார்ந்த ஆர்.ராதாகிருஷ்ணன், ஆகியோர் பி.வி.எஸ்.சி மற்றும் ஏ.எச் பொதுக்கல்வி பிரிவில் 200க்கு 200 கட்அப் மதிப்பெண் பெற்று உள்ளனர். விழுப்புரத்தைச் சார்ந்த என். பிரியதர்ஷினி (200), தர்மபுரியைச் சார்ந்த வி.மாதேஷ் (199.50), பி.கார்த்திகா (199) ஆகியோர் தொழில்கல்வி பிரிவில் முதல் மூன்று இடத்தைப் பிடித்தவர்கள் ஆவர்.

 உணவு, கோழியின தொழில்நுட்ப பிரிவில் முதலிடம் பிடித்தவர்கள்

உணவு, கோழியின தொழில்நுட்ப பிரிவில் முதலிடம் பிடித்தவர்கள்

சென்னையைச் சார்ந்த எப்.முகமது இர்சாத் உசைன் (199.50), கடலூரைச் சார்ந்த எஸ். காயத்திரி (199.25), கரூரைச் சார்ந்த ஏ.கே.நாகர்ஜூன் (199), ஆகியேர் உணவு தொழில்நுட்ப பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் ஆவர். நீலகிரியைச் சார்ந்த எம்.பூஜிதா (199), கிருஷ்ணகிரியைச் சார்ந்த ஆர்.ஹரிஷ் (198.75), திருவண்ணாமலையைச் சார்ந்த வி.சசிகுமார் (198.75), ஆகியோர் கோழியின தொழில்நுட்ப பிரிவில் முதல் 3 இடங்களை பெற்றுள்ளனர்.

 பால்வளத் தொழில்நுட்பத்தில் முதலிடம் பிடித்தவர்கள்

பால்வளத் தொழில்நுட்பத்தில் முதலிடம் பிடித்தவர்கள்

திருப்பூரைச் சார்ந்த எஸ். ஜோதிமணி (199), நீலகிரியைச் சார்ந்த எம்.பூஜிதா (199), திருவள்ளூரைச் சார்ந்த டி.அபர்ணா (198.75), ஆகியோர் பால்வளத் தொழில்நுட்ப பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் ஆவர். பி.வி.எஸ்.சி மற்றும் ஏ.எச்.பொதுக்கல்வி பிரிவில் 2வது இடத்தைப் பெற்ற மாணவி பி.சவுமியா, தர்மபுரியை சேர்ந்தவர், இவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். இவர் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றிருக்கிறார். இவருடைய தந்தை பாரதி திருவண்ணாமலை மாவட்டம, இளங்குன்னி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். தயார் சித்திரை செல்வி, அரசு கலை கல்லூரியில் தமிழ் பேராசிரியையாக பணியாற்றுகிறார்.

 கலந்தாய்வு

கலந்தாய்வு

பழங்குடியின மாணவி சவுமியா 2வது இடத்தைப் பிடித்துள்ளார் அவருக்கு எனது பாராட்டுகள் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ். திலகர் கூறியுள்ளார். மேலும் அவர் 19,20,21 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவித்துள்ளோம். இந்த தேதியில் கலந்தாய்வு நடத்த முடிந்த அளவிற்கு முயற்சிகளை எடுத்து வருகிறோம். மருத்துவ கலந்தாய்விற்கு பின்புதான் கால்நடை மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். மருத்துவ கலந்தாய்வு 17ந் தேதி நடைபெறுகிறது அதன் பின் கால்நடை மருத்துவ கலந்தாய்வு ஆரம்பாமாகும் என தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Above article mentioned that veterinary doctor rank list released 2017
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X