கால்நடை உதவியாளர் தேர்வில் நடந்த குழறுப்படி காரணமாக தேர்வு இரத்து

Posted By:

கால்நடைகள் உதவியாளர் பணிகளுக்கான தேர்வு நடைமுறையில் சிக்கல் ஆதலால் தேர்வு தொடர்பான நடவடிக்கைகளை இரத்து செய்வதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு விளக்கம்.
கால்நடை உதவியாளர் பணியாளர்களுக்கான 1577 காலிப்பணியிடங்களை நிரப்ப ஏப்ரல் 19 முதல் வரவேற்கப்பட்டது. இந்த பணிக்கான நேர்முகத் தேர்வு மே 10 முதல் நடைபெற்றது. இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம் விஜயாபுரத்தை சேர்ந்த கிருத்திகா என்பவர் தாக்கல் செய்த மனுவில் மே 10 ஆம் தேர்வில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் கிருத்திகா பங்கேற்றத்தாகவும் ஆனால் இதுவரை முடிவு வெளிவரவில்லை என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் .

கால்நடை உதவியாள்ர் பணிக்கான்  மீண்டும் தேர்வு கால்நடைத்துறை செயலர் உத்தரவு

 

கால்நடை உதவியாளர் பணியாளர்கள் நியமிக்க அமைச்சர்கள் 6 முதல் 10 இலட்சம் வரை பெற்றுகொண்டு பணியாளர்களை நியமிபிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து சகாயம் போன்ற  நேர்மையான அதிகாரியை நியமித்து விசாரித்து உண்மையை வெளியிட உத்தரவு வெளியிட வேண்டும் என கோரியிருந்தார்.

கால்நடை உதவியாள்ர் பணிக்கான்  மீண்டும் தேர்வு கால்நடைத்துறை செயலர் உத்தரவு

 


இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரனையில் இந்திரா மற்றும் எம்.சுந்தர் முன்னிலையில் நடத்தப்பட்டது . அப்பொழுது அரசு தலைமை வழக்குரைஞர் முத்துக்குமாரசாமி பங்கேற்று கால்நடை உதவியாளர் பணி நியமனமானது
சுழற்சி முறையில் நடைபெற வேண்டும் . மாநிலம் முழுவதும் தவறுதலாக நடைபெற்றுள்ளாதால் கால்நடைத்துறை செயலர் அதனை இரத்து செய்துள்ளார் என அறிவித்தார். மேலும் இதுகுறித்து நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகின்றது என அறிவித்தார் . மேலும் புதிதாக தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கவே வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

 

English summary
here article tell about veterinary assistant post examination cancelled

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia