புதிய டிப்ளமோ படிப்புகள்! கால்நடை மருத்துவப் பல்கலை. அறிமுகம்!!

Posted By:

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வருகிற 2016-17 கல்வியாண்டில் 7 புதிய டிப்ளமோ படிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது.

புதுக்கோட்டையில் உள்ள பல்கலைக்கழகத்தின் மண்டல ஆராய்ச்சி மையத்தில் இந்த ஓராண்டு டிப்ளமோ படிப்புகள் வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திலகர் தெரிவித்துள்ளார்.

புதிய டிப்ளமோ படிப்புகள்! கால்நடை மருத்துவப் பல்கலை. அறிமுகம்!!

இதுகுறித்து துணைவேந்தர் திலகர் அளித்த பேட்டி:

பல்கலைக்கழகம் வருகிற கல்வியாண்டில் கால்நடை தீவன உற்பத்தி, கறி மற்றும் மதிப்புக்கூட்டு பொருள்கள் உற்பத்தி, வான்கோழி வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, கறவைமாடு வளர்ப்பு, வெண்பன்றி வளர்ப்பு, கால்நடை செவிலிய உதவியாளர் படிப்பு என 7 புதிய டிப்ளமோ படிப்புளை(பட்டயப் படிப்பு) அறிமுகம் செய்ய உள்ளது.

ஓராண்டு கொண்ட இந்த படிப்புகள் புதுக்கோட்டையில் உள்ள பல்கலைக்கழகத்தின் மண்டல ஆராய்ச்சி மையத்தில் வழங்கப்படும். இந்தப் படிப்புகளில் சேர பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 தேர்ச்சி கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்படும்.

தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்ததன் அடிப்படையில் முதல் கட்டமாக ரூ. 6.34 கோடியில் 10 நடமாடும் கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட உள்ளன. அவை திருச்சி, தஞ்சை, மதுரை, நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா 2 வீதம் பயன்பாட்டுக்கு விடப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெற முடியும் என்றார் அவர்.

English summary
Tamil Nadu Veterinary and Animal Sciences University has introduces 7 new diploma courses. This courses will be introduced in Pudukottai regional research centre, University Vice-chancellor Thilagar has told to reporters in a press meet.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia