சமூக சேவையில் ஆசை உள்ளவர்களா நீங்கள்?- உங்களுக்காகவே இந்தப் படிப்புகள்

Posted By:

சென்னை: தொடக்கத்தில் வெறும் சமூக சேவையோடு மட்டுமே தொடர்புடைய படிப்பாகக் கருதப்பட்ட சமூகப்பணி படிப்பு, வேகமாக இயங்கும் இன்றைய வாழ்வில் மனித உறவு மேம்படவும், நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளை போக்கவும், போதைப்பொருள் பயன்பாடு, மனநல பிரச்சனைகள், சிறுவர் மற்றும் முதியோர் வாழ்வு போன்றவற்றிற்கு பெரும் பங்காற்றும் துறையாக விளங்கி வருகிறது.

இளைஞர்கள், பெண்கள், ஊனமுற்றோர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் சமூகக் குற்றவாளிகள் வாழ்வில் மாற்றத்தையும், பல்வேறு சமூகப் பிரச்சனைகளை விழிப்புணர்வு ஏற்படுத்தும் படிப்பாகும்.

இதில் பங்காற்றும் ஒருவருக்குக் கிடைக்கும் திருப்தியானது மிக அதிகமாக இருக்கிறது.

உளவியல் ரீதியான அணுகுமுறை:

மனிதனை உளவியல் ரீதியாக அணுகும் ஆர்வம், பொறுமை, நிதானம், விடாமுயற்சி போன்றவை ஒருவரிடம் இருந்தால் இந்தப் படிப்பை மேற்கொள்ளலாம்.

ஆரோக்கிய சமுதாயம்:

இப்படிப்பினை படிப்பவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, பிறரின் வாழ்வில் நம்மால் பெரிய மாறுதலை ஆரோக்கியமாக உருவாக்க முடியும் என்பதை இந்த சமூகப்பணி படிப்பு கற்றுத் தருகிறது.

புதிய பார்வையில் சமூகப்பணி:

முன்பெல்லாம் சோசியல் வொர்க் போன்ற படிப்புகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. அந்த படிப்பிற்கு அதிக மரியாதை கிடைத்துள்ளது. அந்தப் படிப்பைப் பற்றிய பல தவறான கருத்துக்கள் இன்று மறைந்துள்ளன. சமூகப் பணித்துறையில் ஒரு புதிய பார்வை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இப்பணியின் வகைகள்:

சமூகப்பணி படிப்பில், நோயாளிகளின் தேவை அறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் மருந்துகள் எடுப்பது தொடர்பாக உதவுதல் போன்ற முற்றிலும் மருத்துவமனை சார்ந்த கிளீனிக்கல் சோசியல் வொர்க்.

மாணவர்களுக்கான ஆலோசனை:

போதை மருந்து பயன்பாட்டு பிரச்சனைகள், பாலியல் முறைகேட்டு பிரச்சனைகள் தொடர்பாக, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கும் ஸ்கூல் சோசியல் வொர்க்

மனரீதியான ஆலோசனை:

மன உளைச்சலுள்ள குழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினர் ஆகியோருக்கு உள்ள நடத்தை சிக்கல்களை ஆராய்ந்து, அதற்கேற்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியான சைக்யாட்ரிக் சோசியல் வொர்க்.

கிரிமினாலஜி சோஷியல் வொர்க்:

சிறைக்கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, அதன் மூலம் அவர்களைத் திருத்தி, சமூக விரோத நடவடிக்கைகளை குறைப்பது போன்ற பணியான குற்றவியல் மற்றும் திருத்துதல் சோசியல் வொர்க்.

வேலை வாய்ப்புகள்:

கிராமப்புற அவலம் மற்றும் வசதியின்மை, படிப்பறிவின்மை, மருத்துவ வசதிகளில் குறைபாடு மற்றும் மருந்துகளை துஷ்பிரயோகம் செய்தல் போன்ற அவலங்களைப் பற்றிய அதிகரித்துவரும் விழிப்புணர்வானது, சோசியல் வொர்க் துறையில் வேலைவாய்ப்பை அதிகரித்துள்ளது.

அரசிலும் வேலை இருக்கு:

அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGO) வேலை வாய்ப்புக்களை அதிக அளவில் அளிக்கின்றன. மேலும், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன.

அதிக சம்பளமும் உண்டு:

நீங்கள் பணிக்குச் சேரும் தொண்டு நிறுவனத்தைப் பொறுத்து ஆரம்ப சம்பளம் ரூபாய் 12,000 முதல் ரூபாய் 18,000 வரை இருக்கும். அதே சமயம் சர்வதேச ஏஜென்சிகள் அதிக சம்பளம் தருகின்றன.

படிப்புகள்:

பல வித பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விதவிதமான படிப்புகளை வழங்குகின்றன.

சோசியல் வொர்க்ல் இளங்கலைப் படிப்புகள் (BSW) தகுதி பிளஸ் 2 தேர்ச்சி

முதுகலைப் படிப்பு (MSW) - ஏதேனும் இளநிலைப் படிப்பில் தேர்ச்சி

எம்.பில் மற்றும் பி.எச்.டி. முதுநிலை சமூகப்பணி படிப்பில் தேர்ச்சி

 

English summary
Various social work studies to help the students got placed in NGO’s.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia