60% முதல் 80% வரை எடுத்த மாணவர்களுக்கு – விதவிதமான படிப்புகள் இருக்கு!

Posted By:

சென்னை: முதல் ரேங்க், கோல்ட் மெடலிஸ்ட் இவர்களையெல்லாம்விட 60% முதல் 80% வரை மதிப்பெண்கள் வாங்கியவர்கள் பிற்காலத்தில் வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது நான் கண்கூடாக கண்ட உண்மை.

காரணம் இவர்கள் பாடத்தைத் தாண்டி கலை விளையாட்டு என பிற விஷயங்களிலும் ஈடுபாடு உடையவர்களாக முழுமையான பர்சனாலிட்டியாக இருப்பதுதான்.

60% முதல் 80% வரை எடுத்த மாணவர்களுக்கு – விதவிதமான படிப்புகள் இருக்கு!

எஞ்சினியரிங் படிப்பைப் பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் விண்ணப்பித்த அனைவருக்குமே சீட் கொடுத்தும் மீதம் காலியாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

பொறியியல் சீட் வாங்குவதைவிட அப்படிப்பை வெற்றிகரமாக முடிப்பதுதான் இன்றைக்கு சிரமமான விஷயமாக இருக்கிறது. எனவே பொறியியல் படிப்பை சிறப்பாக வெற்றிகரமாக முடிக்கக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதை தெளிவாக ஆராய்ந்து பிறகு முடிவெடுப்பது சிறப்பாக இருக்கும்.

மெடிக்கல் படிப்பை பொறுத்தவரை தமிழகத்தில் குறைந்தளவு கல்லூரிகளே இருப்பதால் மிக அதிகளவு மதிப்பெண் வாங்கியவர்களுக்கான படிப்பாக மட்டுமே அது இருந்து வருகிறது.

BDS எனப்படும் பல் மருத்துவப் படிப்பு MBBS சொல்லித்தரப்படுகிற கல்லூரிகளைவிட சற்று அதிகமான கல்லூரிகளில் தமிழகத்தில் உள்ளதால் இவற்றில் சீட் கிடைக்கும் வாய்ப்பு சற்றே அதிகம். கூடவே B.Pharm எனப்படும் மருந்தியல் B.Sc(Nursing) B.P.T எனப்படும் பிசியோதெரபி, கண் மருத்துவம் சார்ந்த ஆப்டோமெட்ரி ஆகியவையும் மருத்துவம் சார்ந்த நாம் கவனிக்க வேண்டிய படிப்புகளாகும்.

மருத்துவத்தில் மனிதர்களுக்கான மருத்துவம் தாண்டி கால்நடைகளுக்கான மருத்துவம் காலம்காலமாக புகழ்பெற்ற ஒன்றாகும். B.V.Sc. எனப்படும் வெர்ட்னரி சயின்ஸ் படிப்பு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியிலும் இந்தப் பல்கலையின் கீழ் இயங்கும் நாமக்கல் கல்லூரியிலும் சொல்லித் தரப்படுகிறது.

தவிர B.F.Sc. எனப்படுகிற மீன்வளம் சார்ந்த விஷயங்களை பட்டப் படிப்பாக சொல்லித் தருவதற்கென தூத்துக்குடியில் அரசு மீன்வளக் கல்லூரி ஒன்றும் உள்ளது. இந்தக் கல்லூரியும் கால்நடை மருத்துவப் பல்கலையின் கீழ்தான் செயல்படுகிறது. இது சமீப ஆண்டுகளில் வரவேற்பை பெற்றுவரும் இன்னொரு புதிய படிப்பாகும்.

வேளாண் துறை சார்ந்த படிப்பான B.Sc. (Agriculture) எப்போதுமே வரவேற்புள்ள ஒரு படிப்பாகும். கோவையிலுள்ள வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவையில் மட்டுமல்லாது திருச்சி, பெரியகுளம் என பல்வேறு இடங்களில் உள்ள உறுப்புக் கல்லூரிகளிலும் இந்தப் படிப்பு சொல்லித் தரப்படுகிறது. வேளாண் கல்லூரிகளில் சமீப ஆண்டுகளில் அதிகம் நாடப்படும் இன்னொரு படிப்பு Horticulture எனப்படும் தோட்டக்கலை சார்ந்த படிப்பாகும்.

இப்படியான தொழிற் படிப்புகளுக்கான கல்லூரிகள் ஒருபுறம் இருந்தாலும் B.A. B.Sc. B.Com. போன்ற படிப்புகளை வழங்கும் கலை அறிவியல் கல்லூரிகளும் நூற்றுக்கணக்கில் புகழ்பெற்று விளங்குகின்றன.

எனினும் இந்தக் கலை அறிவியல் கல்லூரிகள் ஒரு காலத்திலிருந்த வழக்கமான படிப்புகளிலிருந்து மாறுபட்டு இன்று நிறைய புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

English summary
Various studies for 60 percentage to 80 percentage gather students in Plus two examination.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia