அசத்தல் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் “ஆர்க்கியாலஜி” படிப்புகள்!

Posted By:

சென்னை: பிளஸ் 2 முடித்துவிட்டு என்ன படிக்கலாம் என்று காத்திருக்கும் மாணவர்களுக்கு அரசு வேலைகளைப் பெற்றுத் தருகின்ற ஆர்க்கியாலஜி துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

பழங்கால மனிதர்களின் நாகரிகம், வாழ்க்கை முறை, நினைவுச்சின்னங்கள், கல்வெட்டுகள், கட்டடக்கலை, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், தத்துவஞானம், நில அமைப்பு போன்றவற்றை ஆராய்ந்து படிக்கும் துறையே தொல்லியல் எனப்படும்.

ஆர்க்கியாலஜி எனும் சொல் கிரேக்க மொழி வகையைச் சேர்ந்தது. ஆர்க்கியாஸ் என்றால் பழங்காலப் பொருட்கள் என்றும், லோகோஸ் என்றால் அறிவியல் தத்துவம் என்றும் பொருளாகும்.

அசத்தல் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் “ஆர்க்கியாலஜி” படிப்புகள்!

பண்பாடுகளின் கலவை:

தொல்லியல் படிப்பானது புவியியல், வரலாறு, மானுடவியல், வேதியியல், நிலவியல், கலை மற்றும் இலக்கியம் உள்ளிட்டவையின் கலவையாகும்.

சுற்றுப்புற பாதுகாப்பு:

சுற்றுப்புற பாதுகாப்பு, நகர அமைப்பு, நகர்ப்புற சமூகம், உள்ளிட்ட விஷயங்களை முறைப்படியாக மேற்கொள்வதற்கு இந்த படிப்புகள் அவசியமாகிறது.

கலை சார்ந்த பாரம்பரியங்கள்:

இந்திய தொல்லியல் ஆய்வகம் இந்தியாவின் கலை சார்ந்த பாரம்பரியங்களை பாதுகாப்பதற்காக, இந்திய தொல்லியல் ஆய்வகம் என்னும் அமைப்பை 1862 ஆம் ஆண்டு ஏற்படுத்தியது.

அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்:

பிரிட்டனைச் சேர்ந்த ஜெனரல் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் இந்த அமைப்பின் முதல் இயக்குநராக இருந்தார். தொல்லியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய இவரே, "தொல்லியல் ஆய்வுகளின் தந்தை" எனவும் அழைக்கப்படுகிறார்.

தொன்மையை விளக்கும் கட்டிடங்கள்:

தொல்பொருள் ஆராய்ச்சிக்கு ஏற்ப இந்தியா, சுமார் 24 வட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. இந்தியாவின் தொன்மையை விளக்கும் பழங்கால கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள், மற்றும் கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பதும், பராமரிப்பதும் தொல்லியல் துறையின் முதன்மை பணியாகும்.

இக்கல்விக்கான தகுதிகள்:

1. இளங்கலை பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் படிப்புக்கு பிளஸ் 2 படிப்பு போதுமானது.

2. டிப்ளமோ/முதுநிலை டிப்ளமோ/முதுநிலை உள்ளிட்ட தொல்லியல் படிப்புகளுக்கு, இளநிலை படிப்பில் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தொல்லியல் ஆய்வாளர்கள்:

தொல்லியல் சார்ந்த கண்டுபிடிப்புகளில் ஈடுபடுபவர்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்( ஆர்க்கியாலஜிஸ்ட்) என அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு முதன்மையானது களப்பணி. சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று இவர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆர்க்கியாலஜி படிப்பு வழங்கப்படும் பல்கலைக்கழகங்கள்:

1. இந்திய தொல்லியல் ஆய்வகம் - டெல்லி.

2. அலகாபாத் பல்கலைக்கழகம் - அலகாபாத்.

3. ஆந்திரா பல்கலைக்கழகம் - விசாகப்பட்டினம்.

4. பெங்களூரு பல்கலைக்கழகம் - பெங்களூரு.

5. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் - வாரணாசி.

6. சென்னை பல்கலைக்கழகம் - சென்னை.

7. கொல்கத்தா பல்கலைக்கழகம் - கொல்கத்தா.

8. மைசூர் பல்கலைக்கழகம் - நாகர்ஜூனா நகர்.

9. மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் - பரோடா.

10. குஜராத் பல்கலைக்கழகம் - அகமதாபாத்.

வேலைவாய்ப்புகள்:

தொல்லியல் படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு வெளிநாடு, மற்றும் உள்நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. கல்லூரியில் ஆசிரியராகவும், மற்றும் ஆய்வுக் கூடங்களிலும் பணி புரியலாம். அரசு ஏஜென்சிகளிலும் வேலைவாய்ப்பு உள்ளது.

English summary
Archaeology studies is the best way to the student whoever passed plus 2 for getting job easily in government sectors.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia