கன்ஸ்ட்ரக்‌ஷன், வாட்டர் இரிகேஷன் - எஞ்சினியரிங் படிக்க நினைச்சா இந்தத் துறைகளையும் பாருங்க!

Posted By:

சென்னை: பொறியியல் படிப்புகள் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்தே தொடரும் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் படிப்புகளில் இருந்து முளைத்தவை தான் தற்போது இருக்கும் பல பொறியியல் படிப்புகள்.

தற்போது இதற்கு தான் மெஜாரிட்டி அதிகம்.கன்ஸ்ட்ரக்‌ஷன், டிரான்ஸ்போர்டேஷன், வாட்டர் இரிகேஷன், ஆட்டோ மொபைல், தெர்மல், மெரைன், எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி என அனைத்தையும் சேர்க்கலாம்.

கன்ஸ்ட்ரக்‌ஷன், வாட்டர் இரிகேஷன் - எஞ்சினியரிங்  படிக்க நினைச்சா இந்தத் துறைகளையும் பாருங்க!

போட்டிகள் நிறைந்த இன்றைய வேலை வாய்ப்புச் சந்தையில் தங்களை தனித்துக் காட்டிக் கொள்ள இந்த சிறப்பு படிப்புகள், மாணவர்களுக்கு அவசியம்.சர்வதேச அளவில் ஐ.டி சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கு இன்னும் பத்து ஆண்டுகள் வரை நல்ல வாய்ப்புகள் உள்ளன.

மாணவர்கள் பெற்றோர் மத்தியில் ஆர்வத்தையும், தயக்கத்தையும் எம்படட் எஞ்சினியரிங் படிப்பு ஏற்படுத்தியுள்ளது.இதில் தேர்ச்சி பெற்றவர்களை கொத்திக்கொண்டு போக ஐ.டி நிறுவனங்கள் கால் கடுக்க காத்திருக்கின்றன.

சிவில் படிப்பின் புதிய பரிணாமமான என்விரான்மென்டல் எஞ்சினியரிங் மற்றும் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் துறையின் வாரிசுகளான ஏவியேஷன் மற்றும் ஏரோநாட்டிகல் படிப்புகளும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.நானோ டெக்னாலஜி, பயோடெக் எஞ்சினியரிங், நியூக்ளியர் எஞ்சினியரிங் தொலைநோக்குப் பார்வையில் கவனம் பெறுகின்றன.

எந்த படிப்புகளை தேர்ந்தெடுப்பது என்பதில் பெரிதாக குழப்பம் மற்றும் தயக்கம் இருந்தால் அடிப்படை பிரிவுகளே பெஸ்ட். மேற்படிப்பு, வேலை வாய்ப்பு, ஆர்வம் என ஐடியா இருப்பவர்கள் சிறப்பு பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம்.அதிகம் செலவு பிடிக்கும் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு முன் போதுமான முன்யோசனை பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் மிகவும் அவசியம்.

English summary
Ideas about engineering courses for the fresh students of Plus 2 this year.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia