சைபர் லா படி… சம்பளக் கவர் ரெடி... பொறியியல் மட்டுமா வாழ்க்கை... எவ்வளவு படிப்பு இருக்கு பாருங்க!

Posted By:

சென்னை: பிளஸ் 2விற்கு பிறகு முக்கால்வாசி மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் துறை பெரும்பாலும் எம்.பி.பி.எஸ் அல்லது பொறியியல்தான்.

இன்று உலகம் திமிறிக்கொண்டு பயணிக்கும் வேகத்துக்கு பலப்பல தளங்களில் பயிற்சிபெற்ற இளைஞர்களின் தேவை லட்சங்களில் துடிக்கி றது.

தகுதியானவர்களோ சில ஆயிரங்களில்தான் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிறார்கள். அதே சமயம் பழகிய படிப்புகளை லட்சக்கணக்கா னோர் படித்து முடித்து ஆயிரங்களில் மிஞ்சி யிருக்கும் வேலைவாய்ப்புகளுக்கு முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்கள்.

சைபர் லா படி… சம்பளக் கவர் ரெடி... பொறியியல் மட்டுமா வாழ்க்கை...  எவ்வளவு படிப்பு இருக்கு பாருங்க!

திறமைக்கு மரியாதை:

நமக்குள் ஒளிந்திருக்கும் இயல்பான திறமையை வெளிப்படுத்தும் பணி மூலம் நமது வாழ்க்கை முறையை நிர்ணயித் துக்கொள்ளும் எந்த வேலையும் கௌரவமா னதே என்பதை மாணவர்கள் புரிந்து கொள்வதே இல்லை.

வேலைக்கு உத்தரவாதம்:

நமக்குத் தெரிந்த பாரம்பரியப் படிப்புகளைத் தவிர்த்து, கட்டணம் என்று கையைக் கடிக்காமலும், நிச்சய வேலைக்கு உத்தரவாதமும் தரும் சில படிப்புகளைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

லட்சத்தில் சம்பாதிக்க மொழிகள்:

ஒவ்வொரு நாட்டின் தூதரகமும் அவர்களின் தாய் மொழியை வார இறுதி அல்லது மாலை நேர வகுப்பு களில் கற்றுக்கொடுக்கிறார்கள். மூன்று அல்லது ஆறு மாத கோர்சுகளுக்குச் சில ஆயிரங்கள்தான் கட்டணம்.

வளமான வருமானம்:

புதிய மொழியை அறிந்துகொள்ளும் ஆர்வமும், புதிய கலாசாரங்களை ஆய்வு செய்யும் ஆர்வமும் உள்ள எவரும் தங்களுக்கு விருப்பமான எந்த மொழியையும் படிக்கலாம். போட்டிகள் மெலிந்த வளமான வருமானம் தரும் துறை இது.

கட்டுமான மேலாண்மை:

எம்.பி.ஏ. படிப்பில் இது புதுசு. உலகமே கான்க்ரீட் காடாக உருமாறும் சூழல் இது. பாலங்களைக் கட்டுதல், சாலைகள் அமைத்தல் போன்ற செயல்களை மேலாண்மை செய்யக் கற்றுக்கொடுக்கும் படிப்பு இது.

டூ இன் ஒன்:

மேலாண்மைப் பாடங்களோடு அடிப்படை யான கட்டுமானப் பொறியியல் பாடங்களும் கற்றுத்தரப் படுவதால் இவர்களால் சிறந்த மேனேஜர்களாகவும், பொறியாளர்களாகவும் செயல்பட முடியும்.

ஐஐடியில் படிக்கலாம்:

சென்னை ஐ.ஐ.டி. சிவில் எஞ்சினியரிங் துறையில் இப்படிப்பு கற்பிக்கப்படுகிறது. எம்.பி.ஏ படிப்புக்கு ஆகும் செலவு தான் இந்தப் படிப்புக்கும் ஆகும். இத் துறையில் அடுத்த கட்ட ஒளிமயமாக ரியல் எஸ்டேட் மேலாண்மை படிப்பு தென்படுகிறது.

மறுவாழ்வு தரும் படிப்பு:

பார்வையற்றவர்கள், செவித்திறன் பாதிப்படைந்தோர், வாய் பேச முடியாதோர் போன்ற மாற்றுத்திறன் உடைய மாணவர்களுக்கு அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பாடம் சொல்லித்தரக் கற்றுத்தரும் படிப்புதான் இந்த சிறப்புக் கல்வி. பொதுவாக இன்றைய இளைஞர்கள், ஆசிரியர், பேராசிரியர் பணிகளைப் பெரும்பாலும் தேர்வு செய்வதில்லை.

தேவையும் அதிகம்தான்:

அதிலும் இந்த சிறப்புக் கல்வித் துறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் ரொம்பவே குறைவு. அதனால் இங்கு தேவை அதிகம். போட்டி குறைவு. நீங்கள் எதிர்பார்க்காத சம்பளமும் உண்டு. கொஞ்சம் பொறுமையும் கற்றுத்தருவதிலும் கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் இருப்பவர்களுக்கு இந்தக் களம் சிவப்புக் கம்பளம்.

வழங்கப்படும் இடங்கள்:

Rehabilitation council of India என்னும் ஊனமுற்றவர்களுக்கான மத்திய அரசு நிறுவனம் இந்தப் படிப்பை அறிமுகம் செய்துள்ளது. கோவையில் ராமகிருஷ்ணா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் இந்தப் படிப்பைப் படிக்கலாம். Bachelor of visual impairment Bachelor of Hearing impairment என்று பல்வேறு பாடப் பிரிவுகளும் உண்டு.

சைபர் லா படி... சம்பளக் கவர் ரெடி:

பட்டப்படிப்பை மெரிட்டில் முடித்தாலும் வேலை கிடைக்காத பல ஜீனியஸ்கள் ஹை-டெக் திருடர்களாகத் தொழில்நுட்பத்தைக் கைக்குள் வைத்துக்கொள்ளும் காலம் இது.

ஆப்படிக்க ஒரு படிப்பு:

ஓர் அறைக்குள் ஒற்றை கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு கிரெடிட் கார்டு மோசடி முதல் வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்வது வரை பல்கிப் பெருகிவிட்டார்கள். அவர் களுக்கெல்லாம் ஆப்படிக்கக் கற்றுக்கொடுக்கும் படிப்பு இந்த "சைபர் லா".

குற்றங்களைத் தடுக்க:

"எத்திக்கல் ஹேக்கிங்" மூலம் பல சைபர் குற்றவாளிகளைப் பிடிக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் இப் படிப்பில் கற்றுத்தரப் படுகிறது. கணினிக் கல்வியோடு இந்தப் படிப் பையும் நீங்கள் முடித்தால் உங்களுக்குக் கிடைக்கும் மரியாதை டபுளாக இருக்கும்.

இ.ஆர்.பி:

பொதுவாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தித் துறை மனித வளத் துறை மார்க்கெட்டிங் என்று பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 10 பேராவது பணிபுரிவார்கள். ஆனால் அந்த 10 நபர்களின் வேலையைக் குறைத்து ஒரே ஆளே திறமையோடு பணிபுரிவது எப்படி என்பதைக் கற்றுத்தருவதுதான் "என்டர் பிரைஸ் ரிசோர்ஸ் பிளானிங்" படிப்பு. இந்தப் படிப்புகள் காஸ்ட்லிதான்.

செலவு கொஞ்சம் அதிகம்தான்:

குறைந்தது ஐந்து லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். ஆனால் சிறந்த கல்வி நிறுவனத்தில் படித்துத் தேர்ச்சி பெற்றால் முதல் மாதச் சம்பளமேகுறைந்த பட்சம் 80 ஆயிரம் ரூபாய். இப் படிப்பு முடித்த வர்களுக்கு மோஸ்ட் வான்டட் தேவை இருப்பதால் படித்து முடித்த அடுத்த நொடியே வேலை கன்ஃபர்ம்!

கிளினிக்கல் ரிசர்ச்:

மருத்துவமனைகளில் பல ரத்த மாதிரிகள் திசுக் கள் செல்கள் போன்றவற்றை ஆய்வுக்காகப் பத்தி ரப்படுத்தியிருப்பார்கள். அவற்றின் தன்மை பண்பு கள் ஜீன் வரலாறுகள் பற்றியெல்லாம் கணினியில் பதிவேற்றச் சொல்லித்தரும் படிப்பு. அது மட்டும் அல்லாமல் அறுவை சிகிச்சை அசம்பாவிதங்கள்பற்றித் தெரிந்துகொண்டு அவற்றைச் சமாளிக்கச் சொல்லித் தரும் டாக்டர் படிப்புக்கு இணையான சங்கதிகளைக் கற்றுத் தரும் படிப்பு இது.

ஒரு வருட படிப்பு:

சில சிறந்த மருத்துவமனைகள் தங்கள் சொந்தச் செலவில் இப் படிப்புகளைக் கற்றுத் தருகின்றன. டெல்லியில் உள்ள Institute of clinical research India நிறுவனத்தில் இந்தப் படிப்பு உண்டு. அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் பி.எஸ்ஸி. முடித்தவர்களுக்கு ஒரு வருடப் படிப்பாகவும் சொல்லித் தரப்படுகிறது!

மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க்:

"இன்று சுற்றுச்சூழல் மனித உரிமைகள் குழந்தைத் தொழிலாளர் பிரச்னைகள் பெண் சிசுக் கொலைகள் போன்ற சமூகப் பிரச்னைகள் குறித்த கவனங்கள் அதிகரித்திருக்கின்றன. இது குறித்த சமூகப் பிரச்னைகள் மற்றும் களப் பணிகள் குறித்து சொல்லித்தரும் படிப்பே மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க்.

போட்டிகளும் குறைவு:

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இப் படிப்பை முடித்தவர்க ளுக்கு நல்ல சம்பளம் உண்டு. பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் இந்தப் பாடப் பிரிவு உண்டு என்றாலும் இதைத் தேர்ந்தெடுக்கிறவர்கள் குறைவு. எனவே போட்டிகளும் குறைவு.

அனிமேஷன் மற்றும் கார்ட்டூன் துறை சார்ந்த படிப்புகள்:

கார்ட்டூன் துறையில் ஆர்வமுள்ளவர்கள் NID Ahmedabad J.J.School of Arts. IIT Mumbai - Guwahati போன்ற இடங்களில் டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்புகளில் சேரலாம். டிப்ளமோ படிக்கக் குறைந்தது 12ம் வகுப்பில் 45% மதிப்பெண்களும், இளங்கலை படிப்பிலும் அதே அளவு மதிப்பெண்களையும் கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும்.

ஸ்பேஸ் சயின்ஸ்:

ஸ்பேஸ் சயின்ஸ் துறையில் முதுகலைப் பட்டம் பெற ஆர்வமுள்ளோர் இதே துறை அல்லது இந்தத் துறை சம்பந்தமான வேறு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்போர் விண்ணப்பிக்கலாம். புனே பல்கலைக்கழகத்தில் மட்டுமே இந்தத் துறை சம்பந்தமான படிப்புகள் உள்ளன. பட்டயப் படிப்பும் குஜராத் மற்றும் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் மட்டும் உள்ளன.

English summary
After plus 2 results, here some of the courses listed for give a great future to the students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia