கேஐஎஸ்எஸ் பல்கலை.க்கு வந்த அமெரிக்க அமைச்சர்

Posted By:

சென்னை: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ்(கேஐஎஸ்எஸ்) பல்கலைக்கழகத்துக்கு அமெரிக்க அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் வருகை தந்தார். அங்குள்ள மாணவர்களுடன் அவர் உற்சாகமாக உரையாடினார்.

கேஐஎஸ்எஸ் பல்கலை.க்கு வந்த அமெரிக்க அமைச்சர்

கேஎஸ்எஸ்எஸ் பல்கலைக்கழக வளாகத்தில் 25 ஆயிரம் பழங்குடி மாணவர்கள் பயிலும்பள்ளி உள்ளது. இங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கல்வி, தங்குமிடம் வழங்கப்படுகிறது.

கேஐஎஸ்எஸ் பல்கலை.க்கு வந்த அமெரிக்க அமைச்சர்

இதைக் கேள்விப்பட்ட அமைச்சர், கேஐஎஸ்எஸ் நிறுவனரும், வேந்தருமான டாக்டர் அச்சுதமா சமந்தாவின் சீரிய பணியைப் பாராட்டினார்.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களை துறை அமைச்சராக உள்ள நிஷா, பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் இந்தியா வந்தார்.

கேஐஎஸ்எஸ் பல்கலை.க்கு வந்த அமெரிக்க அமைச்சர்

கேஐஎஸ்எஸ் பல்கலைக்கழக, பள்ளி மாணவர்களைப் பார்த்து அவர் கூறியதாவது: இதுபோன்று பழங்குடி மாணவர்களின் வளர்ச்சிக்காக முயற்சி மேற்கொள்வதை இப்போதுதான் பார்க்கிறேன். இந்த நாள் என் வாழ்வில் ஓர் இனிய நாள். இது மிகவும் சிறப்பான முயற்சி. 25 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி வழங்குவது சாதாரணமான விஷயமே அல்ல. அனைத்து மாணவர்களுக்கு கல்விக் கிடைக்கவேண்டும் என்று டாக்டர் அச்சுதா சமந்தா விரும்புகிறார். அவரது முயற்சி தொடரட்டும். பல நாடுகளுக்குச் சென்றுள்ளேன். பல பள்ளி, கல்லூரிகளைப் பார்த்துள்ளேன். ஆனால் இதுபோன்று எங்குமே பார்த்ததில்லை என்றார் நிஷா தேசாய் பிஸ்வால்.

English summary
"I have been to many countries in my career and met many young children, but I have not seen a place like Kalinga Institute of Social Sciences", said Ms. Nisha Desai Biswal, Hon'ble Assistant Secretary of State for South and Central Asian Affairs in the United States Department of State on December 14, 2015. The senior US Government official was on a visit to KIIT and KISS along with 11 member delegates including Michael Mullins, US Consulate General, Hyderabad.Calling her interaction with 25,000 tribal boys and girls of the institute "a very impressive event", she stated, KISS is so special because it was started as a result of simple dream of a humble man to try to expand opportunities and education.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia