356 பணியிடங்கள்: பணியாற்ற அழைக்கிறது உ.பி. மாநிலம்!!

Posted By:

சென்னை: உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பல்வேறு பணியிடங்களில் பணியாற்ற அம்மாநில அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. உத்தரப் பிரதேச மாநில துணை பணியிட பொதுத் தேர்வாணையம்(யுபிஎஸ்எஸ்எஸ்சி) இதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது. விண்ணப்பங்கள் ஜனவரி 29-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும்.

356 பணியிடங்கள்: பணியாற்ற அழைக்கிறது உ.பி. மாநிலம்!!

எக்ஸ்-ரே டெக்னீஷியன், லேப் டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. எக்ஸ்ரே டெக்னீஷியன் பிரவில் 52 பணியிடங்களும், லேப் டெக்னீஷியன் பிரிவில் 41 பணியிடங்களும், கன்ட்ரோல்டு லெபாரட்டரி டெக்னிக் பிரிவில் 263 பணியிடங்களும் காலியாகவுள்ளன. ஊதிய விகிதமும் சிறப்பாக உள்ளது.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கான விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு யுபிஎஸ்எஸ்எஸ்சி இணையதளமான http://upsssc.gov.in/Default.aspx-ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
Uttar Pradesh Subordinate Services Selection Commission (UPSSSC) invited applications for recruitment to the posts of Controlled laboratory technique O.M., X- Ray Technician and Lab Technician. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 29 January 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia