குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு: தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள்!!

Posted By:

சென்னை: 2016-ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமை பணிகளுக்கான முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 1,079 ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு:  தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள்!!

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.

இதற்கான தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறும். மொத்தம் 1,079 இடங்கள் காலியாகவுள்ளன. இதில் 34 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வை எழுத விண்ணப்பதாரர்கள் 01.08.2016 தேதியின்படி 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்பட்ட வகுப்பினர் 33 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு முடித்தவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யமுடியும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு அகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

இந்தத் தேர்வுக்கு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி, திருச்சி, வேலூர் ஆகிய முக்கிய நகரங்களில் அமைக்கப்படும்.

இந்தத் தேர்வுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான மே 27 கடைசி நாளாகும். இந்த முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும்.

முதன்மை தேர்வுகள் அக்டோபர், நவம்பரில் நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/exams/notifications/2016/CSP_IFS/CSP/CSP_2016_Engl_Notice.pdf என்ற லிங்க்கைக் கிளிக் செய்யவும்.

English summary
The Union Public Service Commission (UPSC) on Thursday released the notification for the 2016 civil services and Indian Forest Service (IFS) examination. The candidates can apply for the exam online by visiting the official website: www.upsconline.nic.in The last date to file application is May 27. The preliminary exam is scheduled to be held on August 7 and the main examination is likely to be held in December, 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia