மருத்துவர் பணியிடங்கள் காலி: அழைக்கிறது யுபிஎஸ்சி...!!

Posted By:

டெல்லி: மருத்துவர் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளதாக மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) அறிவிப்பு செய்துள்ளது.

டாக்டர்கள், டெக்னிக்கல் அதிகாரிகள், சீனியர் சயின்டிபிக் அதிகாரி பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மே 12-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

மருத்துவர் பணியிடங்கள் காலி: அழைக்கிறது யுபிஎஸ்சி...!!

அசிஸ்டண்ட் அந்த்ரோபாலஜிஸ்ட் பணியிடங்கள் 2-ம், டெக்னிக்கல் ஆபீஸர் பணியிடம் ஒன்றும், சீனியர் சயின்டிபிக் ஆபீஸர் பணியிடம் ஒன்று, பெண் மருத்துவ அதிகாரி பணியிடங்கள் 2-ம் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களை யுபிஎஸ்சி, தேர்வு மூலம் நிரப்பவுள்ளது.

நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.upsc.gov.in/ -ல் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களை இந்த இணையதளத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். மே 12-ம் தேதி விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாளாகும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

English summary
How Candidates are Selected for UPSC Job? Candidates will be shortlisted through an interview.How to Apply for UPSC Job? Candidates who are interested in this job can apply through the Official Website of Union Public Service Commission (UPSC). Important Dates Associated with the UPSC Job: Last date to apply online: May 12, 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia