யூபிஎஸ்சி 2017ம் ஆண்டிற்கான அசிஸ்டண்ட் கமாண்டன்ட் வேலை வாய்ப்பு

Posted By:

சென்னை : யூபிஎஸ்சி - மத்திய பொதுத் தேர்வாணையம் 2017ம் ஆண்டிற்கான 179 அசிஸ்டண்ட் கமாண்டன்ட் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்தள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மே 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

யூபிஎஸ்சி 2017ம் ஆண்டிற்கான அசிஸ்டண்ட் கமாண்டன்ட் வேலை வாய்ப்பு

வேலை - அசிஸ்டண்ட் கமாண்டன்ட்

கல்வித்தகுதி - ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

ஊதியம் - ரூ.15,600 - 39,100/ மாதம்

வேலை இடம் - இந்தியா முழுவதும்

விரிவானத் தகுதிகள்

அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்விநிறுவனத்தில் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அசிஸ்டண்ட் கமாண்டன்ட் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

20 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (2 ஆகஸ்ட் 1992ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் 1 ஆகஸ்ட் 1997ம் ஆண்டிற்கு முன் பிறந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதிப் பெற்றவர்கள்)

பிஎஸ்எஃப் - 28 காலிப்பணியிடங்கள்

சிஆர்பிஎஃப் - 65 காலிப்பணியிடங்கள்

சிஎஸ்ஐஎஃப் - 23 காலிப்பணியிடங்கள்

எஸ்எஸ்பி - 63 காலிப்பணியிடங்கள் மொத்தம் 179 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை

எழுத்துத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 23 ஜூலை 2017ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். காலை 10 மணி முதல் 12 மணி வரை முதல் தாள் தேர்வு நடைபெறும். மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடற்தகுதித் தேர்வு நடத்தப்படும். உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வருபவர்களுக்கு நேர்க்காணல் நடைபெறும். நேர்க்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் upsconline.nic.in என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தேவையான தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

English summary
UPSC Recruitment 2017 Scheduled for the post of Assistant Commandant for Central Armed Police Forces. Interested candidates can apply at upsconline.nic.in.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia