யூபிஎஸ்சியின் பிரிலிம்னரி கேள்விகள் அணுகுமுறை அறிவோமா

Posted By:

யூபிஎஸ்சியின் கேள்விகள் ஆராய்வோம் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் யூபிஎஸ்சியின் பிரிலிம்னரி தேர்வு அணுக வேண்டிய முறைகளை அறிவோம் .

யூபிஎஸ்சி தேர்வில் அரசின் திட்டங்களான ஜிஎஸ்டி மற்றும் உன்னத் பாரத் அபியான் மற்றும் வித்யாஞ்சலி யோஜ்னா போன்ற திட்டங்களை பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன .

சிவில் சர்வீஸ் தேர்வில் அரசியல் அமைப்பு பற்றிய கேள்வியில் யூபிஎஸ்சியின் கேள்விகணைகள் நுணுக்கமாக இருந்தன. தெரிந்த கேள்விகள் அடிப்படை கேள்விகள் என்று நினைத்து எளிதில் கையாள முடியாது .தேர்வு எழுதியோர் பலரை படுத்திய கேள்விகள் இவையாகும் .

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினிர்களா ,பிரிலிம்ஸ் திறனாய்வு செய்வோமா

அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுசூழலியல் பகுதியில் சில கேள்விகள் கேட்கப்பட்டன .

வரலாறு, கலை கட்டிடக்கலை பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒரு சிலரை தடுமாற வைத்தது. காரணம் அத்தனை தெளிவில் வரலாறு கேள்விகளும் இல்லை.
பொருளியல் கேள்விகள் எப்பொழுதும் போலவே கிடுக்குபிடியாக இருந்தது.
நடப்பு நிகழ்வுகளை இவ்வளவு நுணுக்கமாக எங்கும் கேட்டிருக்க முடியாது ஒவ்வொரு கேள்வியும் புரிந்த கொள்ளவே சற்று நேரம் பிடிக்கும் .
அரசின் திட்டங்களும் , பொருளியல் கொள்கைகளும் இவ்வளவு கடினமாக படிக்கும் போது கூட தேர்வு எழுதியோர் உணர்ந்ததில்லை .

பருவநிலை மாற்றங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கும் போழுது தேர்வு எழுதியோர்க்கு இயல்பிலே அவர்கள் அந்த தலைப்பில் படித்த மற்ற பாயிண்ட்ஸ்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை .

தாள் இரண்டு :

தாள் இரண்டு வழக்கத்திற்கு மாறான போக்கு மிகுந்த கடினமான சூழலை கணிதம் நன்கு கையாள்பவரையும் யோசிக்க வைத்துவிட்டது .

முடிவெடுத்தல் , பாசேஜ் என்று அழைக்கப்படும் கேள்விகள் தொட தேர்வாளர்கள் விரும்புவதில்லை ஆனால் இந்த முறை அதையேனும் தொட்டுபார்போம் எனும் நிலைக்கு தள்ளப்படுள்ளனர்.

டெஸ்ட் பேஜ் மற்றும் தனி தேர்வை சந்தித்தவர்கள் நான்கு முறை திருப்பி படித்து எழுதுவோர்கள் உட்பட அனைத்து தரப்பு தேர்வு எழுதுவோரும் ஸ்தம்பித்து போகும் நிலை ஏற்ப்பட்டது .

தாள் இரண்டை தகுதி தேர்வாக்கியது யூபிஎஸ்சி, 33% கேள்விகள் மட்டுமே இருந்தால் போதும் என்றது யூபிஎஸ்சி ஆனால் அத்தகைய சேஃப் ஜோன்க்குள் நுழையவே தேர்வு எழுதியோர் சிரமம் அனுபவித்தனர் . 

யூபிஎஸ்சி கேள்வியை எதிர்கொள்ளும் முறைகள் :

ஸ்மார்ட் வொர்க் என்ற உழைப்பு மிக முக்கியம் . கடின உழைப்பை விட சக்திவாய்ந்தது .
ஐம்பது கேள்விகள் அனைவருக்கும் பதிலளிக்க முடியும் .
பிரிலிம்ஸ் தேர்வில் 30 கேள்விகளுக்கு நிச்சயம் அனைவராலும் பதிலளிக்க முடியும் ஆனாலும் சில தகவலகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி தவறு செய்ய வைத்துவிடும் .
80 கேள்விகளுக்கு அனைவரும் விடையளித்திருக்க வேண்டும் . அல்லது 75 கேள்விகளாவது விடையளிதிருக்கப்பட வேண்டும் .
படிப்பதுடன் படித்த கேள்விக்கு திறனாய்வு செய்து விடையளிக்கும் யுக்தி அவசியம் அனைவருக்கும் இருக்க வேண்டும் .
சில கேள்விகளை படிக்கும் முதல் இரண்டு ஆஃப்சன்களான  ஏ, பி களில் சரியாக இருக்கும் போது அடுத்த இரண்டு வரிகளை படிக்கமல் விடையளிக்க தாவும் போக்கை கையாள்வது இயல்பே ஆகும் .
கேள்வியை அந்த கேள்வியின் போக்கில் விடையளிக்க கற்றுகொள்ள வேண்டும் . கேள்வியை தாண்டி தேர்வறையில் சிந்திக்கும் போக்கை கைவிடுங்கள் .
காமன் சென்ஸ் என்ற உணர்வை சரியாக பயன்படுத்துங்கள் அதை நாம் சரியாக பயன்படுத்தமுடியாமல் தடுமாறுவது இயல்பே அதனை நாம் சரியாக பயன்படுத்த பயிற்சி மேற்கொள்ள வேண்டும் .

English summary
here article mentioned about question paper analysis

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia