ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள்.. ஜூன் 18ம் தேதி முதல் நிலைத் தேர்வு

Posted By:

புது டெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஐஏஎஸ், ஐஎப்எஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வினை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது, ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் மத்திய அரசு இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வுகள் முதல்நிலை, மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்றுக் கட்டத் தேர்வாக நடத்தப்படுகின்றன. முதல் கட்டத் தேர்வான முதல் நிலைத் தேர்வு ஜீன் 18ம் தேதி நடைபெறும் என்று யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள்.. ஜூன் 18ம் தேதி முதல் நிலைத் தேர்வு

இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) இந்திய வெளியுறவு சேவை (ஐஎப்எஸ்) இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) ஆகிய பணிகளுக்கான தேர்வினை மத்திய அரசு வருடம் தோறும் நடத்தி வருகிறது ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தத் தேர்வுகள் நடக்கவில்லை. இதற்கு முன்பு மே 26ம் தேதி 2013ம் ஆண்டு தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு இந்தத வருடமே தேர்வு நடக்கவிருக்கிறது. இந்த சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஜீன் 18ம் தேதி நடை பெறும் என்று யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஐஏஎஸ், ஐஎப்எஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற முக்கிய பணிகளுக்கான காலி இடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசு சிவில் சர்வீஸ் தேர்வினை நடத்தி வருகிறது. முதல்நிலை, மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று கட்டத்திலும் தேர்ச்சிப் பெற்று வருபவர்களே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த சிவில் சிர்வீஸ் தேர்வின் மூலம் 980 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 27 காலி இடங்கள் ஊனமுற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஜீன் 18ம் தேதியும் மெயின் தேர்வு தேர்வு அக்டோபர் மாதம் 28ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தேர்விற்கான கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் உள்ள மத்திய அரசு அல்லது மாநில அரசு சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பாராளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட பிரிவு 3 யூஜிசிஏ (1956) கீழ் உள்ள நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையானத் தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : பொதுப்பட்டியலில் உள்ளவர்கள் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். மேலும் பொதுப்பட்டியலைச் சார்ந்தவர்கள் சிவில் சர்வீஸ் தேர்விற்கு 6 முறை மட்டும் முயற்சிக்கலாம்.

ஓபிசி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவைச் சார்ந்தவர்கள் சிவில் சர்வீஸ் தேர்விற்கு 9 முறை மட்டும் முயற்சிக்கலாம்.

எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினரர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவைச் சார்ந்தவர்களுக்கு நிபந்தனை எதுவும் கிடையாது.

உடன் ஊனமுற்றோர் 42 வயது வரை விண்ணப்பிக்கலாம். பொதுப்பட்டியல் மற்றும் ஓபிசி பிரிவைச் சார்ந்த ஊனமுற்றோர்கள் சிவில் சர்வீஸ் தேர்விற்கு 9 முறை மட்டும் முயற்சிக்கலாம். எஸ்சி எஸ்டி பிரிவைச் சார்ந்த ஊனமுற்றோர்களுக்கு நிபந்தனை எதுவும் கிடையாது.

ஜம்மூ மற்றும் காஷ்மீரைச் சார்ந்தவர்களுக்கு வயது வரம்பு : பொதுப்பட்டியலில் உள்ளவர்கள் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

ஓபிசி பிரிவினர் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினரர் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

உடன் ஊனமுற்றோர் 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

ஜம்மூ மற்றும் காஷ்மீரைச் சார்ந்தவர்களுக்கு தேர்வு எழுதுவதில் நிபந்தனை எதுவும் கிடையாது. அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் சிவில் சர்வீ*ஸ் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் : அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணமாக Rs. 100/- வசூலிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட (எஸ்சி மற்றும் எஸ்டி) பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.

மேலும் தகவல்களைப் பெற www.upsc.gov.in என்ற இணையதள முகவரியை அணுகவும்.

English summary
Eng summary : TheUPSC will be conducting the civil services preliminary examination to select IAS, IFS and IPS officers in June after a gap of three years.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia