யூபிஎஸ்சியின் மெயின்ஸ் தேர்வு எழுத அட்டவணை வெளியீடு

Posted By:

மத்திய ஆட்சிப்பணி ஆணையத்தின் முக்கிய தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  யூபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவோர்களுக்கான அட்டவணையை தேர்வுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல் ஆகும் .

யூபிஎஸ்சியின் முக்கியதேர்விற்கு விண்ணப்பிக்கவும் , தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது

யூபிஎஸ்சியின் மெயின்ஸ் தேர்வு 7 நாட்கள் நடைபெறும். யூபிஎஸ்சியின் மெயின்ஸ் தேர்வுக்கு முதல் தாள் கட்டுரைத்தாள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறுகிறது.
யூபிஎஸ்சியின் மெயின்ஸ்தேர்வு அக்டோபர் 28 முதல் தொடங்குகிறது. அக்டோபர் 29 ஆம் நாள் தேர்வு இல்லை. அக்டோபர்30 ஆம் நாள் பொதுஅறிவுத்தாள் 1, பொதுஅறிவித்தாள் 2 காலை 9 மனி முதல் 12 மணி வரையிலும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறும்.

அக்டோபர் 31 ஆம் நாள் யூபிஎஸ்சி மூன்றாவது  பொதுஅறிவுத்தாள் காலை 9 மணி முதல் 12 மணி வரையும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் .
நவம்பர் 1 ஆம் நாள் இந்திய அரசியலமைப்பில் அங்கிகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுத வேண்டும் .
இரண்டாவது அனைவருக்குமான பொதுவான ஆங்கில மொழிக்கான தேர்வினை எழுத வேண்டும் .

நவம்பர் 2 ஆம் நாள் தேர்வு எதுவுமில்லை .
நவம்பர் 3 ஆம் நாள் தேர்வு எழுதுவோர் தங்களுக்கு விருப்பமான பாடம் ஒன்றை  யூபிஎஸ்சி அறிவித்துள்ள 23 பாடங்களில் ஒன்றினை தேர்வு செய்ய வேண்டும் . அவற்றில் தாள் ஒன்று காலை 9 மணிக்கும் அதேநாள் தாள் 2 மதியம் இரண்டு மணிக்கும் நடைபெறும் .

நவம்பர் 3 ஆம் தேதியுடன் யூபிஎஸ்சியின் மெயின்ஸ் தேர்வுகள் நாடு முழுவதும் முடிவடைகிறது. மேலும் யூபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வு எழுதுவோர் சிறப்பு வகுப்பில் பங்கேற்கவும் அரசு பயிற்சி மையங்கள் உதவுகின்றன . 

சார்ந்த பதவிகள் :

இந்தியன் ஆர்மியில் பணியாற்ற யூபிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ் II தேர்வுக்கான அறிவிப்பு

யுபிஎஸ்சி முதண்மை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது

English summary
here article tell about time table of upsc mains
Please Wait while comments are loading...