வந்துவிட்டது நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த யூபிஎஸ்சி ஐஇஎஸ் - ஐஎஸ்எஸ் தேர்வு!

Posted By:

சென்னை : யூபிஎஸ்சி - மத்திய பொதுத் தேர்வாணையம் 2017ம் ஆண்டிற்கான ஐஇஎஸ் மற்றும் ஐஎஸ்எஸ் (இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளியியல் சேவை) தேர்வினை வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான யூபிஎஸ்சி தேர்வு 2017 மே மாதம் 12ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டு 3 வாரத்திற்கு முன்பு வெளியிடப்படும் என யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.

தகுதி வரம்பு : விண்ணப்பதாரர்கள் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். நேபால், பூடான் மற்றும் திபெத் ஆகிய இடங்களில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்தவர்கள் ஜனவரி 1, 1962ம் ஆண்டிற்கு முன்பே இந்தியாவிற்குள் நுழைந்திருக்க வேண்டும். பின்பு அவர்கள் இந்தியாவிலே நிரந்தரமாகக் குடியிருப்பர்களாக இருக்க வேண்டும்.

வந்துவிட்டது நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த யூபிஎஸ்சி ஐஇஎஸ் - ஐஎஸ்எஸ் தேர்வு!

பாகிஸ்தான், பர்மா, இலங்கை, கென்யா, உகாண்டா, தான்சானியா ஐக்கிய குடியரசு, சாம்பியா, மாலவி ஜயர் எத்தியோப்பியா மற்றும் வியட்நாம் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்கள் வம்சாவழியாக பல ஆண்டுகளாக இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டட நாடுகளில் இருந்து வந்தவர்கள் இந்திய அரசாங்கத்தால் தகுதிச் சான்று பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தேர்விற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டாயமாக தகுதிச் சான்று பெற்றவராக இருக்க வேண்டும். ஆனால் தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்கள் தகுதிச் சான்றிதழ் பெறப்பட்டப் பின்னரே பணி நியமனம் செய்யப்படுவர்.

வயது வரம்பு : குறைந்த பட்சம் 21வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். அதிகப் பட்சம் 30வயது வரை இருக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 2 1987 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்நவராக இருக்க வேண்டும். ஆகஸ்ட் 1 1996ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

குறைந்தபட்ச கல்வித் தகுதி :

இந்திய பொருளாதார சேவை (ஐஇஎஸ்) தேர்விற்கான தகுதிகள் : பொருளியல், பிரயோக பொருளியல், வணிக பொருளியல், எகோநோமேட்ரிக்ஸ் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும.

இந்திய புள்ளியியல் சேவை (ஐஎஸ்எஸ்) தேர்விற்காக தகுதிகள் : புள்ளியியல், கணித புள்ளியியல் மற்றும் பிரயோக புள்ளியியல் ஆகியவற்றில் இளநிலை பட்டப் படிப்பினை பெற்றிருத்தல் வேண்டும். மேலும் அத்துடன் புள்ளியியல், கணித புள்ளியியல் மற்றும் பிரயோக புள்ளியியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றிருத்தல் வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 2017 மார்ச் மாதம் 3ம் தேதிக்குள் ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷனைப் பயன் படுத்தி ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.

உடற் தகுதி ; 2017ம் ஆண்டிற்கான இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளியியல் சேவைத் துறையில் சேர்ந்து பணியாற்றுவதற்கு தேவையான உடற் தகுதியினை அவசியம் பெற்றிருத்தல் வேண்டும்.

கட்டணம் : பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் ஊனமுற்றோருக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. மற்றவர்களுக்கு Rs. 200/- கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை நீங்கள் டெபிட் மற்றும் கிரடிட் கார்டு அல்லது நெட் பாங்க் வசதி மூலமாகவும் செலுத்தலாம்.

விண்ணப்பதாரர்கள் www.upsc.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தேவையான தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

English summary
The Union Public Service Commission issued a notification for the IES/ ISS Examination, 2017. Interested candidates can apply latest by March 3, 2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia