மொழியியல் நிர்வாகி பணியிடம்: விண்ணப்பங்களை வரவேற்கிறது யுபிஎஸ்சி...!!

Posted By:

டெல்லி: மொழியியல் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வரவேற்கிறது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜூன் 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மொழியியல் நிர்வாகி பணியிடம்: விண்ணப்பங்களை வரவேற்கிறது யுபிஎஸ்சி...!!

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து பட்டமேற்படிப்பு படித்திருககவேண்டும். மேலும் பட்டமேற்படிப்பில் ஹிந்து, ஆங்கிலத்தை பயிற்றுமொழியாகக் கொண்டு படித்திருக்கவேண்டும்.

தகுதியுள்ளவர்கள் நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பிக்கும் தகுந்த ஆவணங்களை உடன் இணைக்கவேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஜூன் 14 ஆகும். கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Applications are invited by Union Public Service Commission (UPSC) for the recruitment of Linguistic Administrator Posts. Details of this recruitment is listed below. Name of the Post Linguistic Administrator Who is Eligible for the UPSC Job? Qualification: Candidates should have completed Master's degree from a recognised university in Linguistics or should have completed Master's degree in hindi with english as a compulsory or elective subject or as the medium of examination at the degree level.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia