மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஆட்களை நிரப்பும் தேர்வு அறிவிப்பை மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு upsconline.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி)தான் இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது ஆந்த்ரோபோலோசிஸ்ட் 8, அசிஸ்டென்ட் கீப்பர் 1, சயின்டிஸ்ட் 'பி' 3, ஆராய்ச்சி அதிகாரி 1, ஜியாலசிஸ்ட் 1, இன்டலிஜென்ஸ் 1, பொருளாதார அதிகாரி 9, உதவி பேராசிரியர் 4 என மொத்தம் 28 இடங்கள் காலியாக உள்ளன.

பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவுகளில் பட்டப்படிப்பு (டிகிரி) முடித்திருக்க வேண்டும்.
பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: 28.3.2024 அடிப்படையில் பதவி வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இந்தப் பணிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்தவேண்டும். பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.
கடைசிநாள்: விண்ணப்பங்களை வரும் 28.3.2024-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி : மேலும் விவரங்களுக்கு upsconline.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












