உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

Posted By:

சென்னை: உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் பணியிடத்துக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) அறிவித்துள்ளன.

இந்தப் பணியிடங்களைப் பெற நினைக்கும் தகுதியும், திறமையும் படைத்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் சேமநல நிதி அமைப்பில் 170 உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பைத்தான் இப்போது மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பணியிடத்துக்கு அசிஸ்டெண்ட் பிராவிடண்ட் ஃபண்ட் கமிஷனர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்:

1. எஸ்சி - 24
2. எஸ்டி - 14
3. ஓபிசி - 54
4. யுஆர் -78

இந்தப் பதவியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 35க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருத்தல் அவசியம்

நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்தப் பணியிடத்துக்கு விண்மப்பிக்க கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படும். இதனை எஸ்பிஐ வங்கியின் கிளைகளிலோ அல்லது எஸ்பிஐ நெட் பேங்கிங் வசதி மூலமாகவோ அல்லது கிரிடிட், டெபிட்டி கார்டு பயன்படுத்தியோ செலுத்தலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பித்தல் அவசியம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க 09.07.2015 கடைசி தேதியாகும். ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர 10.07.2015 கடைசி தேதியாகும்.

மேலும் முழுமையான விவரங்களைப் பெற http://upsc.gov.in/recruitment/advt/2015/Spl.Advt.52-15%20Web%20Cell.pdf என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
UPSC has invites applications for Assistant Provident Fund Commissioners from interesting candidates. UPSC has going to recruit One hundred seventy Assistant Provident Fund Commissioners in Employees’ Provident Fund Organisation.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia