என்ஜினீயர்கள், டாக்டர்களுக்கு வேலை: மத்திய பொதுத் தேர்வாணையம் அறிவிப்பு

Posted By:

சென்னை: என்ஜினீயர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை மத்திய பொதுத் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வரவேற்றுள்ளது.

தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

என்ஜினீயர்கள், டாக்டர்களுக்கு வேலை: மத்திய பொதுத் தேர்வாணையம் அறிவிப்பு

மத்திய பொதுத் தேர்வாணையமானது, குடியுரிமைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. என்ஜினீயரிங் சர்வீஸஸ் தேர்வு, பாதுகாப்புப் பணிகள் தேர்வு, மத்திய ஆயுதப் படை போலீஸ் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளையும் யுபிஎஸ்சி-தான் நடத்தி வருகிறது.

இணை இயக்குநர், வேளாண் பொறியாளர்கள், மருத்துவ அதிகாரிகள், மருத்துவ ஆராய்ச்சி அதிகாரிகள், சீனியர் எக்ஸாமினர்கள், சீனியர் சயின்டிபிக் ஆபீஸர்ஸ், எகனாமிக் ஆபீஸர்ஸ், துணை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

தகுந்த விண்ணப்பங்களை விண்ணப்பங்களை தபால் மூலம் யுபிஎஸ்சி அலுவலகத்துக்கு அனுப்பவேண்டும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, ஊதிய விவரங்கள் போன்ற யுபிஎஸ்சி இணையதளமான http://www.upsc.gov.in-ல் காணலாம்.

நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள், ஆன்-லைன் மூலம் அப்ளிகேஷன் அனுப்ப ஜனவரி 28 கடைசி நாளாகும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த பின்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து தபால் மூலம் அனுப்பவேண்டும்.

இந்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஜனவரி 29 ஆகும்.

English summary
Union Public Service Commission (UPSC) invited applications for recruitment to the posts of Joint Directors, Agricultural Engineers, Medical Officers/ Research Officers, Senior Examiners, Senior Scientific Officers Grade- II (Armament), Senior Scientific Officer Grade- II (Chemistry), Senior Scientific Officers Grade- II (Engineering), Senior Scientific Officer Grade- II (Metallurgy), Economic Officers, Deputy Assistant Director, Senior Grade of Indian Information Service, Ministry of Information & Broadcasting, Assistant Director Grade- II (Industrial Management and Training), Assistant Director and Deputy Director (ER). Selection Procedure: The selection of the candidates will be done on the basis of the interview/exam conducted by the organization.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia