யுபிஎஸ்சி என்று அழைக்கப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது UPSC IFS 2023 தேர்வின் மூன்றாம் கட்டமான நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலையும், தேர்வு தேதியையும் தற்போது வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://upsc.gov.in/ என்ற இணையதளத்தைக் கிளிக் செய்து காணலாம்.
UPSC IFS 2023 நேர்காணல்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) 2023-ம் ஆண்டுக்கான IFS முதன்மை தேர்வு அறிவிப்பை 17.08.2023 தேதியில் வெளியிட்டது. இதனை தொடர்ந்து 2023 நவம்பர் மாதம் நுழைவுச் சீட்டை வெளியிட்டு 26.11.2024 அன்று UPSC IFS முதன்மை தேர்வை காலை, பிற்பகல் என இரண்டு சுற்றுகளாக நடத்தியது.

இத்தேர்வுக்கான முடிவானது 12.01.2024 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து முதன்மை தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கான நேர்காணல் பட்டியலானது இன்று (28.03.2024) வெளியிடப்பட்டுள்ளது. இதை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பதிவெண், தேர்வு நடைபெறவுள்ள நாள் மற்றும் நேரம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இதனை தேர்வர்கள் https://upsc.gov.in/ என்ற இணைப்பின் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்.
யுபிஎஸ்சி ஐஎப்எஸ்(UPSC IFS) முதன்மை தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட 362 நபர்களுக்கு நேர்காணலானது 22.04.2024 அன்று முதல் 01.05.2024 அன்று வரை நடைபெறவுள்ளது. இத்தகைய நேர்காணலுக்கான அழைப்பு கடிதமானது https://www.upsconline.in என்ற வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளோர் இந்த இணையதளத்துக்குச் சென்று விவரங்களை அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












