யூபிஎஸ்சி பரீட்சை ரிசல்ட் வந்து விட்டது.. பார்த்தீங்களா?

Posted By:

புது டெல்லி : யூபிஎஸ்சி - சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு (இந்திய ஆட்சிப் பணி) முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற முக்கிய பணிகளில் சேருவதற்கான தேர்வினை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வு சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே மெயின் தேர்வில் பங்கு கொள்ள முடியும்.

2016ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை இரண்டாம் கட்டத் தேர்வான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட்டது. மேலும் இந்நத் தேர்வில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டு சிவில் சர்வீஸ் மெயின் தேர்வினை எழுதினார்கள்.

யூபிஎஸ்சி பரீட்சை ரிசல்ட் வந்து விட்டது.. பார்த்தீங்களா?

யூபிஎஸ்சி - சிவில் சர்வீஸ் மெயின் தேர்விற்கான முடிவுகள் 21/02/2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 2017 மார்ச் 20ம் தேதியிலிருந்து நேர்க் காணல் நடத்தப்படும் என யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது. சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் அகில இந்திய அளவில் 2961 நபர்கள் வெற்றி வாகையை சூடி உள்ளனர். அதில் 210 வெற்றியாளர்கள் தமிழ் நாட்டைச் சார்ந்தவர்கள் என நாம் பெருமையுடன் கூறிக் கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் சென்றுப் பார்க்கலாம்.

English summary
UPSC IAS Result 2016-2017 is announced by Union Public Service Commission.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia