நாடு முழுவதும் நேற்று கோலகலமாக சிவில் சர்வீஸ் எக்ஸாம் , யூபிஎஸ்சி கேள்விகளின் போக்கு

Posted By:

யூபிஎஸ்சி தேர்வு :

நாடு முழுவதும் நடைபெற்ற யூபிஎஸ்சி தேர்வானது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியது . சிவில் சர்வீஸ் தேர்வானது முதண்மை மற்றும் முக்கிய தேர்வு நேர்முக தேர்வு கொண்டது . சிவில் சர்வீஸ் தேர்வு வருடா வருடம் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற 24 பதவிகளுக்காக நடைபெறும் தேர்வாகும் . இவ்வருடம் 2017-2018க்கான  முதன்மை    தேர்வானது நேற்று நடைபெற்றது .

சிவில் சர்வீஸ் தேர்வு கடினமா, தேர்வறையில் குழப்பமா , முதன்மை தேர்வின் போக்கு ஆய்வோம் வாங்க

நாடு முழுவதும் நடைபெற்ற தேர்வில் 6லட்சத்து முப்பதாயிரம்   பேர் தேர்வில் பங்கேற்றனர். தமிழகத்தில் சென்னை, வேலூர், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட 72 மையங்களில் 8304 பேர் பங்கேற்றனர், 720 கண்காணிப்பாளர்கள் மற்றும் 28 தேர்வு மேற்பார்வையாளர்கள் 28 துணை மேற்பார்வையாளர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டனர் . புதுசேரியில் 3522 பேர் தேர்வெழுதினார்கள் .

யூபிஎஸ்சி கேள்விதாள்கள் :

நேற்று நடைபெற்ற யூபிஎஸ்சி தேர்வின் முடிவில் தேர்வு எழுதுவோர் பலரின் கருத்துகளில் தேர்வின் கடினத்தன்மை தெரிந்தது . யூபிஎஸ்சி தேர்வை எழுதிய தேர்வாளர்கள் சிலரிடம் ஒன் இந்தியா நடத்திய கணிப்பில் தேர்வு எழுதிய பலரின் கருத்துப்படி பார்தோமேயானால் யூபிஎஸ்சி கேள்வித்தாள்கள் மிக கடினமான முறையில் இருந்தாக கூறினார்கள் .
சென்னையில் செல்வி பிரபா காத்தமுத்து யூபிஎஸ்சி தேர்வை எழுதிய ஆசிரியர் மற்றும் வழிகாட்டி 5 முக்கிய தேர்வில் பங்கு கொண்டவர் மற்றும் 3 முறை இண்டர்வியூ எனப்படும் நேரடி தேர்வில் டெல்லியில் எதிர்கொண்டவர் கருத்துப்படி கேள்விகள் அறிவு பூர்வமாக இருந்தது என்றும் தேர்வை அணுகும் முறையானது சற்று மாறுபட வேண்டும் என்று கூறியிருந்தார். தேர்வு எழுதுவோர்களுக்கு பயிற்சி மையங்களை மட்டுமே நம்பியிராமல் அறிவை அகலப்படுத்தி படிக்க வேண்டும். யூபிஎஸ்சி என்ற கடலில் முழ்க நீச்சலில் பல வழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்றார் .

சென்னையில் பிஎல்ராஜ் அகாடமியின் இயக்குநர் கருத்தானது கேள்விகளில் இருக்கும் நுணுக்கங்கள் பற்றி தெரிவித்தார். வழக்கம்போல் கேள்விகள் யூபிஎஸ்சியின் தரத்தில் அமைந்தது என்றும் கூறினார். தேர்வு முடிந்த கையோடு தன்னை பார்க்க வந்த மாணவர்களிடம் ஏற்ப்பட்ட கேள்விகள் சம்மந்தமான  ஐயங்களை போக்கி யூபிஎஸ்சியின் போக்கை விவரித்தார். அத்துடன் நமது கேள்விக்கு அவர் அளித்த பதிலில் யூபிஎஸ்சியின் கேள்வி போக்கு இவ்வாறு இருக்குமென்று எதிர்ப்பார்த்ததாக கூறினார் மற்றும் தேர்வும் எழுதுவோர்க்கு ஆழ படித்தலுடன் திறனாய்வு செய்ய படிக்கும் போக்கு வளர வேண்டும் என்றார். கேள்விகளை எதிர்கொள்ளும் கலையை தேர்வு எழுதுவோர் கற்க வேண்டும் என்றார் .

மற்ற பயிற்சி மையங்களிலும் தேர்வு குறித்து பல்முக நோக்கு வெளிவந்தது . தேர்வு எழுதிய தமிழ்நாட்டின் தேர்வாளர்களை பொருத்தவரை தேர்வு கடினமாக இருந்தது என்றும் அனைத்து கேள்வியின் தலைப்புகள் நன்றாக தெரிந்திருந்தது ஆனால் தேர்வறையில் கேள்வியின் நூணுக்கத்தால் விடை இதுவோ அல்லது  அதுவோ என்று ஸ்தம்பிக்க வைத்தது என்றும் கூறினார்கள். தெரிந்த தலைப்புகளில் கேள்வியமைந்தாலும் பிரி ஆக்குபைடு தாட்ஸ் எனப்படும் தலைப்பு குறித்து தெரிந்த பல குறிப்புகள் தேர்வறையில் திசை திருப்பியதாக கூறினார்கள்.

English summary
here article mentioned about upsc civil service preliminary examination

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia