சென்னை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய(யுபிஎஸ்சி) தேர்வுகள் இனி 100 சதவீதம் ஆன்-லைன் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய மக்கள் குறைதீர் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதில்:

தற்போது யுபிஎஸ்சி தேர்வுக்கான பதிவுகள் 95 சதவீதம் ஆன்-லைனில் நடந்து வருகின்றன. இனி 100 சதவீதம் ஆன்-லைனில் பதிவு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
போட்டித் தேர்வுகளை சீரமைக்க கடந்த 20 மாதங்களாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
யுபிஎஸ்சி தேர்வு பதிவுகளில் இதுவரை ஒரு பிரச்னை கூட வந்ததில்லை. அப்படி ஏதாவது பிரச்னை வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்காகவே ஆன்-லைன் நடைமுறை தொடங்கப்ட்டுள்ளது என்றார் அவர்.


Click it and Unblock the Notifications

