சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு – தமிழகத்தில் 204க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி!

Posted By:

டெல்லி: ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

இந்தத் தேர்வை 16933 பேர் எழுதினர். இவர்களிலிருந்து 3200 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு – தமிழகத்தில் 204க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி!

தமிழகத்திலிருந்து தேர்வு எழுதிய 904 பேரில் 240க்கும் மேற்பட்டோர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஏப்ரல் 27 ஆம் தேதி தொடங்கும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஜாட் சமூகத்துக்கான இடஒதுக்கீடு ரத்து தொடர்பாக மறுஆய்வு மனுவை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான இறுதி முடிவுக்குப் பிறகே முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

English summary
A list carrying roll numbers of successful candidates have been put up on the UPSC’s website — www.upsc.gov.in.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia