குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு தொடக்கம்!!

Posted By:

சென்னை: மத்திய பொது பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்திய குடிமைப் பணி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று தொடங்கியது.

குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு தொடக்கம்!!

யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. இதையடுத்து எழுத்துத் தேர்வுக்குத் தகுதியானவர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று தொடங்கியது. இது டெல்லி ஷாஜகான் சாலையிலுள்ள தோல்பூர் ஹவுஸில் நடைபெறறு வருகிறது.

இந்தத் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி 23 மையங்களில் நடைபெற்றன.

மொத்தம் 9,45,908 பேர் இந்த ஆரம்பத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதில் 4.63 லட்சம் பேர் தேர்வை எழுதினர். ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பணியிடங்களுக்கான தேர்வாகும் இது.

English summary
Union Public Service Commission (UPSC) has announced the results of Civil Services (Main) Examination, 2015 on February 20. Interview Schedule: Candidates who have qualified in the written exam can appear for the personality test/interview. The interview is scheduled to be held today (March 8) at Dholpur House, Shahjahan Road, New Delhi - 110069.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia