UPSC Civil Services Main Exam Results: யு.பி.எஸ்.சி., தேர்வு முடிவு: தமிழகத்தில் சாதித்தது யார்?

யு.பி.எஸ்.சி., என்று அழைக்கப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், நேற்று (மே.23) 2022ம் ஆண்டுக்கான மெயின் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இந்த தேர்வில், தமிழகத்தில் சென்னை பெரம்பூரை சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி அகில இந்திய அளவில் 107வது இடம் பிடித்து, மாநில அளவில் முதல் இடத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

குடிமைப் பணி முதல் நிலை தேர்வு 2022 ஜூன் 5ம்நாள் நடைபெற்றது. மொத்தம் 11,35,697 பேர் தேர்வு எழுத விண்ணப்பிருந்த நிலையில், 5,73,735 பேர் தேர்வில் பங்கேற்றனர்.

யு.பி.எஸ்.சி., தேர்வில் சாதித்த சென்னை பெண் யார்..?

2022 செப்டம்பரில் நடத்தப்பட்ட முதன்மை எழுத்துத் தேர்வுக்கு, 13,090 பேர் தகுதி பெற்றனர். மொத்தம் 2,529 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். இவர்களில், பல்வேறு பணிகளுக்காக மொத்தம் 933 பேரை (ஆண்கள் 613, பெண்கள் 320) ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

யு.பி.எஸ்.சி., தேர்வில், தமிழகத்தை சேர்ந்த 39 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில், சென்னை பெரம்பூரைச் சேரந்த ஜீஜீ என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

எலக்ட்ரீசியன் தொழில் செய்பவரின் மகளான இவர், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் பெண்கள் கல்லூரியில் படித்து வருகிறார். 2022ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை (UPSC-Civil Serivice) எழுதிய அவர், முதல் முயற்சியிலேயே 107வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.பி.எஸ்.சி., தேர்வில் சாதித்த சென்னை பெண் யார்..?

இதேபோல, கோவில்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ண சாமி, யூபிஎஸ்சி தேர்வில் 117ஆவது இடத்தையும், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் மகளான மதிவதனி ராவணன் என்பவர் 447ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மேலும், குடியரசு என்பவர் 849ஆவது இடத்தையும், அருண் 436ஆம் இடத்தையும், , கார்த்திக் 488ஆவது இடத்தையும், எழிலரசன் 523ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

யு.பி.எஸ்.சி., தேர்வில் சாதித்த சென்னை பெண் யார்..?

ஏற்கெனவே, குடிமைப் பணியில் இருந்த குடியரசு 849ஆவது இடத்தையும், ராகுல் 858ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். அதேபோல், சுப்புராஜ் தற்போது டேராடூனில் ஐஎஃப்எஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

யுபிஎஸ்சி தேர்வை, இவர் தமிழில் எழுதி, 621வது இடத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

UPSC Exam தேர்வு முடிவுகளை அறிய...!

https://www.upsc.gov.in/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC Civil Services Exam results 2022: The Central Public Service Commission, known as UPSC, has released the final exam results for the posts including IAS, IPS, IFS. (May 23) In the afternoon of this main examination, 39 candidates have passed and set a record. At the state level, student Jeejee from Perampur has won first place.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+