யுபிஎஸ்சி சிடிஎஸ் தேர்வு தேதி அறிவிப்பு!!

Posted By:

புதுடெல்லி: மத்திய அரசுப் பணி பொதுத் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) கம்பைன்ட் டிஃபன்ஸ் சர்வீஸஸ் தேர்வுக்கான (சிடிஎஸ்) தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுகள் வரும் அக்டோபர் 23-ம் தேதியன்று நடைபெறவுள்ளது.

யுபிஎஸ்சி சிடிஎஸ் தேர்வு தேதி அறிவிப்பு!!

இந்தத் தேர்வுகளை ஆண்டுதோறும் 2 முறை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. பிப்ரவரி மற்றும் அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தத் தேர்வு நடைபெறும்.

இதில் தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியன் மிலிட்டரி அகாடமி, நேவல் அகாடமி, ஏர்போர்ஸ் அகாடமியில் பணியமர்த்தப்படுவர்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தனித்திறன் தேர்வு, மருத்துவத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்தியன் மிலிட்டரி அகாடமி, ஆபீஸர் டிரைனிங் அகாடமிக்கு விண்ணப்பம் செய்பவர்கள், பட்டப்படிப்பு படித்திருந்தால் போதுமானது. நேவல் அகாடமி பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் பி.இ. படித்திருக்கவேண்டும். ஏர்போர்ஸ் அகாடமிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் பட்டப்படிப்பு அல்லது பி.இ. படிப்பை படித்திருக்கவேண்டும்.

விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும். மேலும் விவரங்களுக்கு யுபிஎஸ்சியின் இணையதளமான www.upsc.gov.in -ல் தொடர்புகொள்ளலாம்.

English summary
Union Public Service Commission (UPSC) Combined Defence Services Examination (CDS October) exam dates are out. According to the official notification the CDS exam will be conducted on October 23. The national level examination, conducted by UPSC will be held twice a year (February and October/November) for recruitment into Indian Military Academy, Naval Academy, Air Force Academy and Officers' Training Academy. Selection Procedure: Selection of candidates will be based on their performance in the written examination,

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia