யூபிஎஸ்சியின் சிடிஎஎஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு

Posted By:

மத்திய அரசு நடத்தும் யூபிஎஸ்சியின் சிடிஎஸ் தேர்வுக்கன அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது . இந்திய இராணுவத்தில் பணிப்புரிய கனவு கொண்டு விண்ணப்பித்துள்ள தேர்வர்களே உங்களுக்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது.

சிடிஎஸ் தேர்வு நவம்பர் 19 ஆம் நாள் நடைபெறுகிறது  அட்மிகார்டு டவுன்லோடு செய்யலாம்

மத்திய அரசின் மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வை சிடிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் உங்களுக்கான தேர்வு மைய ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்து கொள்ளலாம. அதிகாரபூர்வ தளத்தில் உங்கள் விண்ணப்ப பதிவெண்ணை பதிந்து அட்மிட் கார்டு டவுன்லோடு செய்து கொள்ளவும்.

சிடிஎஸ் தேர்வர்களே உங்களுக்கான அட்மிட்கார்டு வெளியிடப்பட்டுள்ளது . தேர்வுக்கு தேவையான உபகரணங்களை இப்போதிருந்து தயாராக வைத்து கொள்ளவும்.

தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருப்பின் யூபிஎஸ்சியிடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். யூபிஎஸ்சியின் நேரடி தொடர்பில் அனைத்தும் அறிந்து கொள்ளலாம். யூபிஎஸ்சியிடம் தொடர்பு கொள்ள உங்களுக்கான தொலைபேசி எண்கள்: 011-23385271,11-23381125, 011-23098543 அறிவித்துள்ளது . யூபிஎஸ்சியால் அறிவிக்கப்பட்ட எண்களை காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளவும்.

யூபிஎஸ்சியின் சிடிஎஸ் தேர்வர்க்கான முக்கிய அறிவிப்பில் தேர்வர்கள் தங்கள் தேர்வறைக்கு வரும்பொழுது மொபைல் போன், பேஜர் , கால்குலேடெர் உள்ளிட்ட மின்சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

யூபிஎஸ்சி சிடிஎஸ் தேர்வுக்கு தேவையான விதிமுறைகளை பின்ப்பற்றி தேர்வு எழுத செல்லுங்கள் வெற்றி பெறுங்கள். யூமிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ் தேர்வானது மத்திய அரசால் இந்திய ராணுவத்திற்கு பணிபுரிய வருடத்திற்கு இருமுறை மத்திய தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படுகிறது . கம்பைண்டு டிஃபென்ஸ் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் எஸ்எஸ்பி என அழைக்கப்படும் நேரடி தேர்வில் பங்கேற்க வேண்டும் அது ஐந்து நாட்கள் நடக்கும் இறுதியில் வெற்றி பெறுபவர்கள் இந்தியன் மிலிட்டரி அகாடமி அல்லது சென்னை ஒடிஏவில் பயிற்சி பெற பணியமர்த்தப்படுவார்கள். 

யூபிஎஸ்சியின் சிடிஎஸ் தேர்வுநாள் நவம்பர் 19 ஆகும். 

சார்ந்த பதிவுகள் :

இந்தியன் ஆர்மியில் பணியாற்ற யூபிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ் II தேர்வுக்கான அறிவிப்பு 

மத்திய தேர்வு ஆணையம் நடத்தும் இந்திய இராணுவத்திற்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது 

English summary
here article tell about CDS exams hall tickets released by upsc

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia