சிவில் சர்வீஸ் தேர்வு ஜீன் 18 அட்மிட் கார்டு விரைந்து டவுன்லோடு செய்ய யூபிஎஸ்சி அறிவுறுத்தல்

Posted By:

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் தேர்வாளருக்கு யூபிஎஸ்சி அறிக்கை விடுத்துள்ளது .
அட்மிட்கார்ட்களை தேர்வுக்கு முன்னதாகவே டவுன்லோடு செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளது . ஏதேனும் தவறுகள் இருப்பின் முன்னதாக தெரிவிக்குமாறு யூபிஎஸ்சி அறிவித்துள்ளது . கடைசி நேர தரவிறக்கத்தை தவிர்க்குமாறு யூபிஎஸ்சி கேட்டு கொண்டது .

சிவில் சர்வீஸ் தேர்வு அட்மிட் கார்டு டவுன்லோடு செய்து தேர்வு நேர நெருக்கடி தவிர்த்தல்


யூபிஎஸ்சி மத்திய அரசின் தேர்வாணையம் ஆகும் .இது சிவில் சர்வீஸ் தேர்வினை நடத்துகின்றது . சிவில் சர்வீஸ் தேர்வானது ஐஏஎஸ் ,ஐபிஎஸ் உள்ளிட்ட இருப்பத்தினான்கு  பதவிகள் கொணடது .

சிவில் சர்வீஸ் தேர்வு முதண்மை தேர்வு , முக்கிய தேர்வு ,நேர் முக தேர்வு கொண்டது . இந்தாண்டு ஜூன் 18 ல் முதண்மை தேர்வு நாடு முழுவதும் நடக்க இருக்கின்றன .

நாடு முழுவதும் லட்ச கணக்கானோர் பங்கு கொள்ளும் யூபிஎஸ்சி தேர்வானது முக்கிய தேர்வுகளில் ஒன்றாகும் . தற்பொழுது தேர்வு நெருங்கும் வேளையில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோர்கள் தங்கள் தேர்வு மையம் அறிந்து கொள்ள வேண்டும் .


சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் கடந்த இருவாரமாக தரவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றன . மேலும் www.upsconline.nic.in இணையத்தில் டவுன்லோடு செய்யலாம் 


சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோர்கள் இறுதி நேர நெருக்கடியை தவிர்க்குமாறு யூபிஎஸ்சி கேட்டுகொண்டுள்ளது .

மேலும் யூபிஎஸ்சி மொபைல் போன் மற்றும் மற்ற மின் சாதனங்களை கொண்டு வருவதை  தடை அறிவிப்பு வெளியிட் டுத்துள்ளது மீண்டும் விடுக்கப்பட்ட அறிவிப்பிலும் மின்சாதனங்கள் தடையை உறுதி செய்துள்ளது யூபிஎஸ்சி , ஆக தேர்வு எழுதுவோர் இதனை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் .தேர்வு மையத்திற்கு மொபைல்போன் கொண்டு செல்வதை தவிர்க்கவும் 

English summary
here article mentioned about upsc admit card downloading and advise of upsc

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia