உ.பி. தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு அப்துல் கலாமின் பெயர்!!

Posted By:

சென்னை: உ.பி. தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு (UPTU) மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமுக்கு பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று அறிவித்தார்.

உ.பி. தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு அப்துல் கலாமின் பெயர்!!

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: டாக்டர் அப்துல் கலாமின் பெயர் வைப்பதை நாங்கள் பெருமையாக நினைக்கிறோம். விரைவில் இதற்கான பணிகள் நடைபெறும். மேலும் கலாமின் நினைவைப் போற்றும் வகையில் அங்கு மிகப்பெரிய நினைவு மண்டபம், பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது என்றார் அவர்.

இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: உத்தரப் பிரதேச மாநில தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் மிக நெருங்கியத் தொடர்பைக் கொண்டிருந்தார் அப்துல் கலாம். பல நிகழ்ச்சி்யில் இங்கு பங்கேற்று அளப்பரிய பணிகளை அவர் இங்கு செய்துள்ளார். பல மாணவர்கள் அவர் இங்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இமெயில் உள்ளிட்டவற்றில் மாணவர்களின் அறிவுப்பசிக்கு அவர் வழிகாட்டி வந்தார் என்றார் அவர்.

English summary
Uttar Pradesh government today announced that it will rename Uttar Pradesh Technical University (UPTU) as Dr APJ Abdul Kalam Technical university. Chief Minister Akhilesh Yadav has announced to rename UPTU as Dr APJ Abdul Kalam University. It has been also decided to construct a grand memorial for Kalam in the new campus of the university,

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia